14 மாவட்டங்களில் வேகமாக குறையும் தொற்று.. கோவை, கடலூரில் மோசமாகும் பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று 14 மாவட்டஙகளில் 100க்கும் குறைவான நபர்களே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கையும் தமிழகத்தில் சரசரவென சரிந்து வருகிறது.
தமிழகத்தில் தற்போதைய நிலையில் 51,458 பேர் மட்டுமே நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று மட்டும் 5,820 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 11264 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 4796 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மூன்றாவதாக கடலூர் மாவட்டத்தில் 3742 பேரும், சேலத்தில் 3092 பேரும், செங்கல்பட்டில் 2723 பேரும் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மாவட்ட நிலவரம்
தமிழகத்தில் இன்று 5793 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மாவட்ட நிலவரம் என்று பார்த்தால் சென்னையில் கொரோனாவால் இன்று 955 பேர் பாதிக்கப்பட்டுளளனர். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 538 பேரும், கடலூரில் 388 பேரும், செங்கல்பட்டில் 361 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலையில் 272 பேரும், திருவள்ளூரில் 246 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை தஞ்சை நிலவரம்
திண்டுக்கல் மாவட்டத்தில் 118 பேரும், ஈரோட்டில் 118 பேரும், கள்ளக்குறிச்சியில் 184 பேரும், கன்னியாகுமரியில் 116 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் 111 பேரும், நாகப்பட்டினத்தில் 136 பேரும், புதுக்கோட்டையில் 100 பேரும், ராணிப்பேட்டையில் 135 பேரும், சேலத்தில் 122 பேரும், தஞ்சாவூரில் 150 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூரில் மிக குறைவு
திருவாரூரில் 123 பேரும், தூத்துக்குடியில் 50 பேரும், திருநெல்வேலியில் 153 பேரும், திருச்சியில் 111 பேரும், வேலூரில் 158 பேரும், விழுப்புரத்தில் 130 பேரும், விருதுநகரில் 67 பேரும், தர்மபுரியில் 24 பேரும், கரூரில் 43 பேரும், கிருஷ்ணகிரியில் 86 பேரும், நாமக்கல்லில் 96 பேரும், நீலகிரியில் 48 பேரும், பெரம்பலூரில் 17 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video

சென்னையில் 17 பேர் பலி
தமிழகத்தில் இன்று கொரோனாவால் 88 பேர் உயிரிழந்துள்ளனர். அதிபட்சமாக சென்னையில் 17 பேரும், கோவையில் மற்றும் கடலூரில் தலா 5 பேரும், சேலத்தில் 6 பேரும், திருவள்ளூரில் 8 பேரும், திருப்பூரில் 4 பேரும் பலியாகி உள்ளனர். வேலூர், செங்கல்பட்டில் 3 பேர் பலியாகி உள்ளனர். விழுப்புரம், திருநெல்வேலி உள்பட 7 மாவட்டங்களில் 2 பேர் பலியாகி உள்ளனர், ஒட்டுமொத்தமாக பார்த்தால் தமிழகத்தில் சென்னையில் தான் மிக அதிகமாக 2862 பேர் பலியாகி உள்ளனர்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications