‛‛கோபமான மின்வாரிய ஊழியர்கள்’’.. தமிழகம் முழுவதும் திடீர் போராட்டம்! மொத்தமாக முடங்கிய பணிகள்
சென்னை: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திட்டமிட்டப்படி இன்று மாநிலம் முழுவதும் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மின்வாரியத்தில் காலியாக உள்ள 55,000 பணியிடங்களை நிரப்புதல் உள்பட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தமிழகம் முழுவதும் இன்று மின்வாரிய பணிகள் முடங்கி உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் மிகவும் முக்கியமான ஒன்று மின்சாரத்துறை. இந்நிலையில் தான் மின்வாரியத்தில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தொடர்ந்து பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் தமிழக அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மின்வாரியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வேலைப்பளு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் ‛லைன்மேன்' பணியாளர்கள் உள்ளூர்காரர்களை பணிக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் முக்கிய அறிவிப்பானது. அதாவது தமிழ்நாடு மின்வாரியத்தில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள 55 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நீண்டகாலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணியாளர்கள் ஓய்வு பெறும்போது உரிய நேரத்தில் ஓய்வுக்கால பணபலன்களை வழங்க வேண்டும்.
பிற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் குடும்ப நல நிதியான ரூ.5 லட்சத்தை மின்வாரியத்திலும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜுலை 9 ம் தேதி மாநிலம் முழுவதும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தொழிலாளர் நல ஆணையத்தில் நேற்று பேச்சுவார்த்தை என்பது நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு என்பது எட்டப்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை என்பது தோல்வியடைந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி இன்று மின்வாரிய ஊழியர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தங்களின் 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை 9 மணி முதல் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
மின்வாரிய தலைமை அலுவலகங்களின் முன்பு மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தால் தமிழகத்தில் இன்று மின்வாரிய பணிகள் முடங்கி உள்ளது. மேலும் சென்னையில் உள்ள மின்வாரிய அலுவலகங்களின் முன்பு அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் மின்வாரிய அலுவலகங்களில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications