இதுதான் ரொம்ப முக்கியம்.. ஸ்மார்ட்டான உத்தரவை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை.. மாணவர்கள் குஷி!
சென்னை: தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதமும் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடத்தி பள்ளிகளில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
கோடை விடுமுறைக்கு பின் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் இந்த வருடம் கோடை வெயில் மிக மோசமாக இருந்தது. எப்போதும் இருக்கும் கோடை காலம் போல இல்லாமல் மிக மிக மோசமாக கோடை வெயில் வாட்டி எடுத்தது.

தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வரும் நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பாக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி கல்வித்துறை சார்ந்த பல்வேறு நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு முறையாக சென்று சேர வேண்டும்.
அறிவிக்கப்படும் நலத்திட்டங்கள் முறையாக பள்ளிகளுக்கு செல்ல வேண்டும். இதை கண்காணிக்க மாவட்ட வாரியாக 38 அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் தங்களுக்கு கீழ் இருக்கும் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் அரசின் திட்டங்கள் சரியாக சென்று சேர்ந்து உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
எல்லா மாணவர்களுக்கும் எல்லா திட்டங்களும் சரியாக சென்றுள்ளதா என்பதை கண்காணிப்பதே இவர்களின் பணி என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா உத்தரவிட்டுள்ளார்.
தாமதமாக திறக்கப்பட்ட பள்ளிகள்: கடும் வெயில் காரணமாக கடந்த மாதம் 12 நாட்கள் தாமதமாகவே பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் கடந்த 12ம் தேதி 6-12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. 1-5ம் வகுப்புகளுக்கு 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. 1ம் தேதியில் இருந்து 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்ட பள்ளிகள் அதன்பின் மீண்டும் 12, 14 தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி போன நிலையில் மீண்டும் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கடந்த திங்கள் கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது.
பள்ளிகள் தொடங்கி நடந்து வருகிறது: இந்த நிலையில் வெயில், மழைக்கு இடையே ஒருவழியாக பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வரும் நிலையில் தனியார் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கவனிக்க தொடங்கி உள்ளனர்.
கட்டணம்: நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை கண்காணிக்க தொடங்கி உள்ளனர். அதோடு இது தொடர்பாக பெற்றோர்கள் தங்கள் மாவட்ட ஆட்சியர்களிடம் அல்லது மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.
இரண்டு முக்கிய உத்தரவு: இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் இரண்டு முக்கியமான உத்தரவுகளை பள்ளிகளுக்கு பிறப்பித்துள்ளார். அதன்படி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அனைத்து கல்வி அலுவலர்கள் மாதாந்திர கூட்டத்தில் அமைச்சர் அன்பில் பேசினார்.
அதில், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் நடைபெறும்போது, முதன்மை கல்வி அலுவலர்கள் நேரில் சென்று பயிற்சிகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் ஆசிரியர்கள் பயிற்சி சரியாக வழங்கப்படுகிறதா என்று உறுதி செய்யப்படும்.
இரண்டாவதாக தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதமும் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடத்தி பள்ளிகளில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இலவசம்: இதுக்கு போக இன்னொரு பக்கம் ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வியை வழங்க இலவச கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம் தமிழ்நாடு அரசு மூலம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
அரசியலமைப்பு சட்டம் 21-Aஇன் கீழ் இது சட்டமாக இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு முறையான பள்ளியில் நிறைவான, சமமான, தரமான முழுநேரத் தொடக்கக் கல்விக்கான வழங்கப்பட வேண்டும் என்று விதி வகுக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின்படி அரசால் நடத்தப்படும் அரசுப் பள்ளிகளில் எப்போதும்போல அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச கல்வி வழங்கப்படும். அதே சமயம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்க ஆசைப்பட்டால் அதற்கும் வழி ஏற்படுத்திகொடுக்கப்படும்.
இது தொடர்பாக உதவி மைய எண்ணுக்கு 14417 தொடர்பு கொண்டு விவரங்களை பெற முடியும்.அதன்படி தனியார் பள்ளிகள் குறைந்தது 25% குழந்தைகளை இந்த திட்டத்தின் கீழ் கட்டணம் இல்லாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவர்களுக்கான கட்டணத்தை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும்.
இந்த தனியார் பள்ளிகளுக்கு கட்டண நிலுவை தொகை 364.43 கோடியை சமீபத்தில்தான் தமிழ்நாடு அரசு விடுவித்தது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி 8000 தனியார் பள்ளிகளில் பள்ளிக்கு தலா 20 - 25 சதவிகித மாணவர்கள் படிக்கின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications