பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை! தாய்மொழியில் கல்வி அவசியம்! மாநில கல்விக் கொள்கையில் முக்கிய பாய்ண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையில் பள்ளிப் படிப்பு முதல் பட்டப் படிப்பு வரை தாய்மொழி வழியிலான கல்வி அவசியம் எனக் குழு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளிகளில் சுமார் 95 சதவிகிதம் பள்ளிகளில் பயிற்று மொழியாக தமிழ் இருந்து வருகிறது.

பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சியமைத்துத் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டிலேயே தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கையைத் தமிழக அரசு உருவாக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்பின் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

Tamil Nadu Education Policy

சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கூட்டங்களை நடத்திய இந்த குழு, 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையைத் தயார் செய்தது. இறுதியாக கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினின் மாநில கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை சமர்பித்தனர். இதன்பின் தமிழக அரசு அமை காத்த சூழலில், இன்று முதல்வர் ஸ்டாலின் பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ளார்.

அதில் பள்ளிப் படிப்பு முதல் பட்டப் படிப்பு வரை தாய்மொழி வழியிலான கல்வி அவசியம் என குழு பரிந்துரை செய்திருக்கிறது. இதன் மூலமாக பள்ளிக் கல்வியில் தமிழே முதல் மொழியாக இருப்பது அவசியமானது. ஆரம்பக் கல்வியில் இருந்து பல்கலைக் கழக மட்டம்வரை தமிழே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலமாகக் குழந்தைகள், மாணவர்கள் அனைத்து தரப்பினரும் தாய்மொழியிலேயே படித்து பட்டம் பெற முடியும். தமிழ்நாட்டில் ஏற்கனவே தமிழ் வழியில் படிப்பதற்காக அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல் கடந்த திமுக ஆட்சியின் போதே பொறியியல் படிப்பு தமிழில் அறிமுகம் செய்யப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் உள்ள கல்லூரிகள் தமிழ் வழியில் பொறியியல் படிப்புகள் தொடங்கப்பட்டன.

ஆனால் மாணவர்கள் மத்தியில் தமிழ் மொழியில் தொடங்கப்பட்ட படிப்புகளுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் மொத்தமாக 33,459 தொடக்க பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் தொடக்கப் பள்ளிகளில் இது தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கையில் 94.6 சதவிகிதமாகும்.

இதேபோல் மேற்கு வங்கத்தில் தொடக்கக் கல்வியைத் தாய் மொழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 89.90 சதவிகிதமாகும். கர்நாடகாவை பொறுத்தவரை 53.50 சதவிகித மாணவர்கள் கன்னட மொழியில் தொடக்கக் கல்வியைப் பயின்று வருகிறார்கள். அதேபோல் தமிழ்நாட்டின் அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் பிஇ மற்றும் பிடெக் படிப்புகள் படித்து பட்டம் பெற முடியும்.

அதேபோல் ராமநாதபுரம், விழுப்புரம், பட்டுக்கோட்டை போன்ற பல்கலைக்கழகங்களுக்குக் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளிலும் தமிழ் வழியில் பொறியியல் படிப்புகளை வழங்கி வருகின்றன. மற்ற மாநிலங்களை பொறுத்தவரை 2022ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் எம்பிபிஎஸ் பாடத்திட்டம் இந்தியில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

அதேபோல் நாடு முழுவதும் 10 மாநிலங்களில் 20 பொறியியல் கல்லூரிகளின் பயிற்று மொழியாகத் தாய் மொழி உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, பெங்காலி மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்த பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் எல்கேஜி முதல் பட்டப்படிப்பு வரை தாய் மொழியிலேயே பட்டம் பெற முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனை வரும் காலங்களில் விரிவாக்கத் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+