"விஜய்க்கு பாமக ஆதரவா?" இன்று அன்புமணி தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம்.. பரபரக்கும் பனையூர்
சென்னை: இன்று பாமக பாமக தலைவர் அன்புமணி அக்கட்சி எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.. சட்டசபை கட்சித் தலைவர் தேர்வு உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. மேலும், தவெகவுக்கு ஆதரவு தரலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக 4 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது..
தமிழக அரசியலில் இன்று பல அதிரடி நகர்வுகள் நடக்கவுள்ளது.. 108 இடங்களைப் பிடித்துத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணைத் தொட இன்னும் 10 இடங்கள் தேவைப்படும் நிலையில், சிறு கட்சிகளின் நிலைப்பாடு முக்கியமானதாக மாறியுள்ளது.

இதற்கிடையே சென்னை பனையூரில் இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு 4 இடங்களில் பாமக வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் சட்டமன்றக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
மேலும், தவெக பெரும்பான்மையைப் பெறாத நிலையில், அவர்களுக்கு ஆதரவு தரலாமா என்பது குறித்தும் குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கவுள்ளது. ஏற்கனவே அதிமுக தரப்பில் தவெகவுக்கு ஆதரவு தரப்போவதில்லை என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் திட்டவட்டமாகக் கூறிவிட்ட நிலையில், பாமக என்ன முடிவை எடுக்கப் போகிறது என்பதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்பட்டுள்ளது..
இன்று ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ள நிலையில், பா.ம.க-வின் 4 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு அவருக்குக் கிடைத்தால் அது பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு பெரியளவில் உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications