பிரசாரம் ஓய்ந்தது.. கடைசி நாளில் தமிழக அரசியல் தலைவர்களின் இறுதி பரப்புரைகள் எங்கெங்கு நடந்தது?
சென்னை: தமிழகத்தில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. அரசியல் கட்சி தலைவர்கள் யார் யார் எங்கெங்கு பிரச்சாரம் செய்தனர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த 39 நாட்களாக அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வந்தனர். இந்த நிலையில் தேர்தல் 23 ஆம் தேதி என்பதால் 21 ஆம் தேதியான இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

6 மணிக்கு மேல் எந்த அரசியல் கட்சிக்கும், அரசியல் சின்னத்திற்கும், எந்த வகையிலும் வாக்கு கேட்க கூடாது. பிரச்சாரம், வாக்கு கேட்பது என்றில்லை, சமூகவலைதளங்களிலும் யாரும் வாக்கு கேட்கக் கூடாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இதனால் மாலை 6 மணிக்குள் அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரத்தை முடித்தனர்.இன்றைய தினம் யார் யார் எங்கெங்கு பிரச்சாரம் செய்தனர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஸ்டாலின்
காலை 7 மணி சோழிங்கநல்லூர், காலை 10 மணிக்கு வேளச்சேரியில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த நிலையில், பிற்பகல் 3 மணிக்கு கொளத்தூரில், சொந்த தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.
எடப்பாடி பழனிசாமி
அது போல் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி காலை 10 மணிக்கு சேலத்தில் பிரச்சாரத்தை முடித்த நிலையில் மதியம் 2 மணிக்கு தருமபுரியில் அதிமுக கூட்டணி கட்சியினரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
விஜய்
தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களில் கரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு விஜய் செல்லாத நிலையில் கடைசி நாளான இன்று காலை 10 மணிக்கு சோழிங்கநல்லூரில் பிரச்சாரம் செய்தார். இதையடுத்து பிற்பகல் 2 மணிக்கு சைதாப்பேட்டையில் விஜய் பிரச்சாரம் செய்தார்.
அன்புமணி ராமதாஸ்
சேலத்தில் காலை 9 மணிக்கு பிரச்சாரத்தை முடித்த அன்புமணி மதியம் 2 மணிக்கு தருமபுரியில் சவுமியா அன்புமணியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
சீமான்
காலை 9 மணிக்கு காரைக்குடியிலும், 10 மணிக்கு ஐந்து விளக்கு பகுதியிலும், காலை 11 மணிக்கு பழைய பேருந்து நிலையம் பகுதியிலும் பிரச்சாரம் செய்த சீமான், பிற்பகல் 3 மணிக்கு பாண்டியன் திரையரங்கம் அருகே பிரச்சாரம் செய்தார்.
-
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications