புஸ்ஸி ஆனந்திடம் அன்புத் தொல்லை.. தரையில் அமர்ந்து அடம்பிடித்த சேலம் தவெக மாவட்ட செயலாளர்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்திற்கு முன்னுரிமை கொடுத்து, அவரை நாற்காலியில் அமரச் சொல்லி, தரையில் அமர்ந்து அடம்பிடித்தார் தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன்.

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் தலைவர்கள் தேர்தல் தொடர்பான பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்தவகையில், முதல் முறையாக தேர்தல் களம் காணும் தவெக தலைவர் விஜய் நாளை சேலத்தில் கட்சி நிர்வாகிகள் சந்திப்பை நடத்துகிறார்.

TVK Leader Parthiban Offers Chair to N Anand Sits on Floor at Salem Press Meet

தவெக தலைவர் விஜய், செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து, தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் அவர் ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், சேலத்தில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொள்கிறார். நிகழ்ச்சி நடைபெறும் சேலம் சீலநாயக்கன்பட்டியில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதனை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று ஆய்வு செய்தார்.

அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய புஸ்ஸி ஆனந்த், "ஒவ்வொரு பகுதியிலும் அனுமதிக்கப்பட்டவர்களை தவிர்த்து, வேறு யாரையும் வாகனத்தில் அழைத்து வரக்கூடாது. அழைத்து வந்து, உள்ளே விடாவிட்டால், வந்தவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். இது தொடர்பாக அந்தந்த பகுதி நிர்வாகிகளிடம் தெளிவாக கூறிவிடுங்கள்.

க்யூ ஆர் கோடு உடன் கூடிய அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரும் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு முன் கூடியே வந்து விடுங்கள். அதை விட்டு விட்டு அங்கே இங்கே என அலையக் கூடாது. ஒன்றிய நிர்வாகிகளிடம் தெரிவித்து விடுங்கள். அடையாள அட்டை இல்லாதவர்களை அழைத்து வர வேண்டாம்" என்று அறிவுறுத்தினார்.

காவல்துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கியூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4998 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது எனத் தெரிவித்தார்.

சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்திற்கு முன்னுரிமை கொடுத்து, அவரை நாற்காலியில் அமரச் சொல்லி, தரையில் அமர்ந்து அடம்பிடித்தார் சேலம் தவெக மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன்.

புஸ்ஸி ஆனந்த், நாற்காலியில் தவெக மாவட்ட செயலாளர் பார்த்திபனை அமருமாறு கூறினார். அதற்கு மறுத்த பார்த்திபன், நீங்கதான் உட்காரணும் என அடம்பித்தார். "அண்ணே நீங்க உட்காருங்க, இல்ல இல்ல நீங்க உட்காருங்க,.. நீங்க தான் உட்காரணும்.. இல்ல இல்ல” என்று ஆனந்த் உடன் அடம்பிடித்து அன்புத் தொல்லை செய்த பார்த்திபன், உடனே தரையில் அமர்ந்தார். மீண்டும் புஸ்ஸி ஆனந்த் வற்புறுத்தியதைத் தொடர்ந்து இருவரும் சோபாவில் அமர்ந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+