Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொங்கல் ரூ.3000 + பென்சன் திட்டம் + மகளிர் உரிமை தொகை.. தேடி வரும் உளவுத்துறை.. ஸ்டாலின் மெகா பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆளும் திமுக அரசு தனது தேர்தல் வியூகங்களை வகுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. வரிசையாக முக்கியமான நலத்திட்டங்களை, அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

பென்சன் திட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்காகப் புதிய உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை (ஜனவரி 3, 2026) அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்படி, மாநில அரசு ஊழியர்களுக்கு அவர்களின் கடைசி அடிப்படை ஊதியத்தில் 50% உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும்.

கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான மூவர் ஓய்வூதியக் குழுவின் அறிக்கை அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இக்குழு, பல்வேறு ஓய்வூதியத் திட்டங்களை ஆராய்ந்து தமிழ்நாட்டுக்கு ஏற்ற புதிய மாதிரித் திட்டத்தை பரிந்துரைத்திருந்தது.

TAPS திட்டத்தின்கீழ், ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்தில் 10% ஓய்வூதிய நிதிக்கு செலுத்த வேண்டும். கூடுதல் நிதித் தேவையை மாநில அரசே ஏற்கும். இத்திட்டத்தால், ஓய்வூதிய நிதிக்கு ₹13,000 கோடி கூடுதல் செலவு அரசுக்கு உடனடியாக ஏற்படும்.

பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு இணையாக ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு உண்டு. ஒரு ஓய்வூதியதாரர் மரணமடைந்தால், அவர் பெற்றுவந்த ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாகப் பரிந்துரைக்கப்பட்ட பயனாளிகளுக்குக் கிடைக்கும். ஓய்வு அல்லது பணி மரணத்தின்போது, சேவை காலத்தின் அடிப்படையில் அதிகபட்சமாக ₹25 லட்சம் பணிக்கொடை வழங்கப்படும்.

தகுதிச் சேவைக்காலம் நிறைவு செய்யாதவர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (CPS) சேர்ந்து, TAPS அமலுக்கு முன்னர் ஓய்வூதியம் பெறாமல் ஓய்வு பெற்றவர்களுக்கு 'சிறப்பு கருணை ஓய்வூதியம்’ உண்டு. மேலும், ஆண்டுதோறும் சுமார் ₹11,000 கோடி அரசு பங்களிக்க வேண்டும், இது ஊழியர்களின் ஊதியத்தைப் பொறுத்து அதிகரிக்கக்கூடும்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை விரிவாக்கம்

இதேபோல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், தமிழ்நாட்டில் உள்ள தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவியை வழங்குகிறது. இந்த நொடியில் தமிழ்நாட்டில் இரண்டு கோடி பேர் வரை இந்த திட்டம் மூலம் நேரடியாக நிதி பெறுகிறார்கள். முன்னதாக நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில், ஏராளமான பெண்கள் இத்திட்டத்திற்காக விண்ணப்பித்திருந்தனர். அங்கு அதிகாரிகள் விண்ணப்பங்களைப் பெற்று தகுதியை சரிபார்த்தனர்.

இந்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர். ஆவணங்கள், வருமான விவரங்கள் மற்றும் குடும்ப நிலையை கவனமாக சரிபார்த்து, தகுதியான பயனாளிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்தனர். இந்த விரிவான சரிபார்ப்புக்குப் பிறகு, புதிதாக தகுதியானோர் பட்டியலை தமிழக அரசு இறுதி செய்தது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, அவர்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்களுக்குக் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன. அதன்படி கூடுதல் மகளிருக்கு கடந்த டிசம்பரில் இருந்து பணம் அனுப்பப்பட்டு வருகிறது

பொங்கல் பரிசு

முதல்வர் மு.க.ஸ்டாலின், பொங்கல் திருநாளை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு சிறப்புப் பரிசு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்தத் தொகுப்பில் ₹3,000 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு நீளக் கரும்பு, வேட்டி மற்றும் சேலைகள் ஆகியவை அடங்கும். இவை அனைத்து நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கலுக்கு முன்பாக விநியோகிக்கப்படும். அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் இருப்பவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படும்.

எப்படி பொங்கல் பரிசு வாங்குவது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இது மிகவும் எளிமையானதே. உங்களுக்கு ஒரு டோக்கன் ரேஷன் கார்டு அடிப்படையில் நாளை முதல் வழங்கப்படும். டோக்கன் கிடைத்தவர்கள் அதை காட்டி ரேஷன் கடைகளில் பொருட்கள் மற்றும் பணத்தை வாங்கிக்கொள்ளலாம்..

பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக டோக்கன் அச்சடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த டோக்கனில் முக்கியமான விவரங்கள் இடம்பெற்று உள்ளன. தமிழ்நாட்டில் 2 கோடியே 22 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை, நெய் உள்ளிட்டவை பரிசுத் தொகுப்பில் இடம்பெறுகிறது.

சர்வே எடுக்கும் ஸ்டாலின்

இப்படி தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆளும் திமுக அரசு தனது தேர்தல் வியூகங்களை வகுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உளவுத்துறை மூலம் ஐந்து கட்டங்களாக ஒரு விரிவான கருத்துக்கணிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளது. கட்சி வட்டாரங்கள் இந்த முக்கியமான தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.

சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, ஆளும் கட்சிகள் இதுபோன்ற உளவுத்துறை ஆய்வுகளை மேற்கொள்வது பொதுவான ஒரு நடைமுறையாகும். இதன் முக்கிய நோக்கம், தங்கள் கட்சிக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் சாதகமான தொகுதிகளுடன், சவால்களை எதிர்கொள்ள வேண்டிய பலவீனமான பகுதிகளையும் துல்லியமாக அடையாளம் காண்பதுதான். இதன்மூலம், தேர்தல் உத்திகளை வகுக்க ஒரு தெளிவான புரிதலைப் பெற முடியும்.

1. விரைவிலேயே தொடங்கவுள்ள இந்தக் கருத்துக்கணிப்பு, எதிர்வரும் தேர்தலுக்கான திமுகவின் உத்திகளை செம்மைப்படுத்த பேருதவியாக இருக்கும். பிரச்சாரங்களை மிகத் திறம்பட வடிவமைக்கவும், மக்களுக்குச் சரியான மற்றும் ஈர்க்கக்கூடிய வாக்குறுதிகளை வழங்கவும் இது வழிகாட்டும். இதன்மூலம் தேர்தல் களத்தில் கட்சியின் நிலையை மேலும் வலுப்படுத்த முடியும். அதன் அடிப்படையில் மேற்கண்ட திட்டங்கள் மூலம் பயனடைந்த மக்களிடம் தமிழக அரசு அதிகாரிகள் கேள்விகளை எழுப்ப உள்ளனர்.

2. உங்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கிறதா? புதிய TAPS பென்சன் திட்டம் மூலம் நீங்கள் பலன் அடைந்தீர்களா? உங்கள் குடும்பத்தில் யாராவது பலன் அடைந்தார்களா? பொங்கல் பரிசு தொகை காரணமாக பலன் அடைந்தார்களான? இலவச பேருந்து மூலம் பயன் அடைந்தீர்களா? என்று முக்கியமான கேள்விகளை அதிகாரிகள் கேட்க உள்ளார்களாம்.

3. நேரடியாக உள்ளூர் அதிகாரிகள் மூலமாகும், மறைமுகமாக உளவுத்துறை வழியாகவும் அதிகாரிகள் இந்த ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளார்களாம்.

4. இதற்காக விரைவில் அதிகாரிகள் விரைவில் வீடு வீடாக செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+