கையெழுத்தான வித்தியாசமான டீலிங்! தமிழ்நாட்டில் 5 முனை போட்டி.. யாருங்க இது புது டீம்? போட்டி தீவிரம்
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் சசிகலா இணைந்து புதுக் கூட்டணி க்கான ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதால் தமிழக சட்டமன்ற களத்தில் 5 முனைப் போட்டி உருவாகியிருக்கிறது.
விழுப்புரம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன், அஇபுதமமுக பொதுச் செயலாளர் சசிகலா சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், சசிகலாவின் அஇபுதமமுக, ராமதாஸ் தரப்பு பாமகவுடன் இணைந்து தமிழகம், புதுச்சேரி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தமிழக மக்களின் நலனுக்காக கூட்டணி அமைத்திருப்பதாக ராமதாஸ் கூறியிருக்கிறார். கூட்டணி, 234 தொகுதிகளும் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் 5 முனை போட்டி ஏற்பட்டிருக்கிறது.
மகன் அன்புமணியை பழிவாங்க போட்டி
அதிமுக - பாஜக கூட்டணியில் உள்ள தனது மகன் அன்புமணியை பழிவாங்க அவர் நிறுத்தும் வேட்பாளர்களுக்கு எதிராக தனது சாரிபில் வேட்பாளர்களை நிறுத்தி அன்புமணியை தோற்கடிக்க வேண்டும் என்று ராமதாசும், வளர்த்து ஆளாக்கி முதல்வர் நாற்காலியில் தன்னால் அமர வைக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி துரோகியாக மாறிவிட்டதால் அவரது தலைமையிலான அதிமுகவை தென் மாவட்டங்களில் தோற்கடித்து எடப்பாடிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று சசிகலாவும் திட்டமிட்டதால் ராமதாசும் சசிகலாவும் கைக்குலுக்கியி ருக்கிறார்கள்.

துரோகிகளை வீழ்த்த வேண்டும் என்கிற ஒற்றைப் புள்ளியில் இவர்கள் இருவரை யும் இணைத்துள்ளது என்கிறார்கள். ராமதாஸ்-சசிகலா சந்திப்பில், தேர்தல் செலவு களுக்கு எம்மிடம் பணம் இல்லை என்கிற புலம்பல் பாட்டை ராமதாஸ் பாடியிருக்கி றார். அதனை நான் பார்த்துக்கொள்கிறேன் ; கவலைப்படாதீர்கள் என்று நம்பிக்கைக் கொடுத்துள்ளார் சசிகலா.
234 தொகுதிகளிலும் போட்டி
234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று சொல்லப்பட்டாலும் தேர்ந்தெடுக்க ப்பட்ட குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் போட்டியிடலாம் என்றும் ராமதாசுக்கு சொல்லப்பட்டுள்ளது. அதேசமயம், 134 தொகுதிகளில் பாமகவும், 100 தொகுதிகளில் சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியும் போட்டியிடலாம் என சசிகலா சொல்லியிருக்கிறார். அதனால்தான் 134 தொகுதிகளில் போட்டியிட தங்கள் தரப்பில் ஆட்கள் இருக்கிறார்களா? என ஆராய்ந்துள்ளது தைலா புரம் தோட்டம்.
வடக்கு மற்றும் மேற்கு தமிழகத்தில் மட்டுமே போட்டியிடுவதாக இருந்தால் 134 தொகுதிகளுக்கு ஆட்களை நிறுத்தி விட முடியும். ஆனால், தமிழகம் முழுவதும் தானே தொகுதிகளை பரவலாக பகிர்ந்து கொள்ள முடியும். அப்படியிருக்கையில் தென் தமிழகத்தில் நமக்கு ஆட்களே இல்லையே ? அதனால் தென் மாவட்டங்களில் வேட்பாளர்களுக்கு எங்கே போவது ? என ஜி.கே.மணியிடம் ராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் போட்டி
இதனையடுத்துத்தான் குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் போட்டியிடலாம் என்கிற பேச்சு தைலாபுரம் தோட்டத்தில் எழுந்துள்ளது. இது குறித்து சசிகலாவிடம் ராமதாஸ் விவாதித்திருக்கிறார். அப்போது, தென் மாவட்டங்களில் எந்தெந்த தொகுதிகளுக்கு உங்களிடத்தில் ஆட்கள் இல்லையோ அங்கு எங்கள் சார்பில் சிலரை அறிமுகம் செய்கிறோம் . அவர்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல, வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் எங்களுக்கு வேட்பாளர்கள் இல்லாத போது உங்களிடம் இருந்தால் அவர்களை நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம் என ஒரு வித்தி யாசமான டீலிங் பேசப்பாடிருக்கிறது.
ஆக, ராமதாஸ்-சசிகலா கூட்டணி உருவாகி விட்டாலும், வேட்பாளர்கள் பஞ்சம் அவர்களின் இருவர் தரப்பிலும் உருவாகியிருக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications