மின்வாரியம் அதிரடி.. அசரடித்த காற்றாலை மின்சாரம்..எகிறும் மின்உற்பத்தி.. கரண்ட் பிரச்னை இனி குறையும்
சென்னை: காற்றாலை மின்சாரம் உற்பத்தி தொடர்பாக குட்நியூஸ் ஒன்று வெளியாகி உள்ளது.. இது தமிழக மக்களுக்கு பெருத்த மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.
தமிழகத்தில் கோவை, திண்டுக்கல், உடுமலை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்செந்துார் உள்ளிட்ட இடங்களில், 10 ஆயிரம் மெகா வாட் திறனுடைய காற்றாலைகளை, தனியார் நிறுவனங்கள் நிறுவியுள்ளன..

ஆடிமாதம்: வழக்கமாக, ஆடி மாதம் இந்த காற்றாலைகளிலிருந்து மின் உற்பத்தி செய்யப்படும், குறிப்பாக, மே முதல் செப்டம்பர் வரை காற்றாலை மின் உற்பத்தி சீசன் என்பார்கள்.. வழக்கமாக, இந்த மாதங்களில் தினமும் சராசரியாக, 3,000-4,000 மெகா வாட் அளவுக்கு, மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தின் மின்தேவையை பெருமளவு இந்த காற்றாலைகளும் பூர்த்தி செய்கின்றன.
காற்றாலைகள்: அந்தவகையில், இப்போதும் ஆடி மாதம் நடந்து வருவதால், சீசன் துவங்கிவிட்டது.. ஆடி மாதம் காற்றின் வேகம் அதிகம் இருக்கும் என்பதால் காற்றாலைகள் தொழிலில் "பீக் சீசன்" என்று அழைக்கப்படுகிறது.
ஜூன் 1-ம் தேதி தொடங்கியுள்ளது. ஜூலை 17ம் தேதி முதல், 15 நாட்கள் தினமும் சராசரியாக, 10 கோடி யூனிட் காற்றாலை மின்சாரம் உற்பத்தியாக இருந்து வந்த நிலையில், காற்றின் வேகம் படிப்படியாக குறைந்ததால், தினமும் சராசரியாக, 2.5 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகி உள்ளதாம். காற்றின் வேகம் தினமும் மாறுபட்ட காரணத்தால் அதிகபட்சமாக 80 மில்லியன் யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

செப்டம்பர்: வரும் செப்டம்பர் மாதத்துக்குள் மின் உற்பத்தி இன்னும் அதிகரிக்கும் என்று இந்திய காற்றாலைகள் சங்க தலைவர் கஸ்துாரி ரங்கையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்ல, இது தொடர்பாக ஒரு சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் மேலும் சொன்னதாவது: ஆடி மாதம் தொடங்கிய முதல் நாளில் மொத்தம் 106 மில்லியன் யூனிட் மின்உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தினமும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் எதிர்வரும் நாட்களில் மின் உற்பத்தியும் சிறப்பாக இருக்கும். பழைய காற்றாலைகளை பயன்படுத்துவதை நிறுத்துமாறு அரசு அறிவுறுத்துகிறது.
நம்பிக்கை: மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் காற்றாலைகள் பழையதாக இருந்தால் என்ன, புதிதாக இருந்தால் என்ன, அவற்றில் இருந்து மின் உற்பத்தி செய்யும் வரை அவற்றை பயன்படுத்த வேண்டும். இதுகுறித்து எங்கள் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து அரசு கலந்து பேசி முடிவு மேற்கொள்ளலாம்" என்று கூறியிருக்கிறார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications