மின்சார வாரியம் திடுதிப்புன்னு போட்ட உத்தரவு.. இனிமேல் இப்படித்தான்.. நோட் பண்ணுங்க மக்களே.. சபாஷ்
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவானது, பொதுமக்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.
மாஞ்சா நூல் பட்டம் விடக்கூடாது என்று 2015-லேயே தடைச்சட்டம் சென்னையில் கொண்டு வரப்பட்டது. இதனால் ஆரம்பத்தில் மாஞ்சா நூல் பட்டம் விற்பவர்கள், வாங்குபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வந்தனர்.

அதற்கேற்றவாறு, மாஞ்சாநூல் பட்டமும் ஓரளவு கட்டுப்பட்டுதான் காணப்பட்டது. ஆனால், 3 வருடங்களுக்கு பிறகு திடீரென திரும்பவும் முளைத்துவிட்டது, சென்னைவாசிகளை அதிர்ச்சி நிறைந்த கவலையில் ஆழ்த்தியது. பைக்கில் தகப்பனுடன் சென்றுகொண்டிருந்த 3 வயது குழந்தையின் கழுத்தில், எங்கிருந்தோ பறந்துவந்த மாஞ்சா நூல் மாட்டிக்கொண்டுவிட்டது.. இதில், கழுத்து அறுபட்டு அந்த குழந்தை இறந்தே போனான்.
மாஞ்சாநூல்: இப்படி, சென்னையில் மாஞ்சா நூல் பட்டத்தால் உயிரிழப்புகள் அதிகரித்தன.. பலர் காயமடைந்தனர்... இதையடுத்து சென்னையில் மாஞ்சா நூல், பட்டம் தயாரிக்க, பறக்க விட, விற்பனை செய்ய, சேமித்துவைக்க தடை விதிக்கப்பட்டது. தடையை மீறுபவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது... இதற்கு பிறகே, மாஞ்சா நூல் பட்டம் பறக்க விடுவது கணிசமாக குறைந்தது...
சமீபத்தில், ஒரு சிலர் சட்ட விரோதமாக ஆன்லைன் மூலம் ரகசியமாக விற்பனை செய்து வருவதாக சென்னை போலீசுக்கு தகவல் கிடைக்கவும், அதுகுறித்தும் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டது.. இப்படி பல்வேறு நடவடிக்கைகளை அரசு தரப்பில் எடுத்துவரும்நிலையில், தற்போது மின்வாரியம் சார்பிலும் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
மின்வாரியம்: அதாவது, அனல் உள்ளிட்ட மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின் வாரியம், மின் கோபுர வழித்தடம் வாயிலாக பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து செல்கிறது... எனவே, சென்னையில் முக்கிய இடங்களை தவிர்த்து, மற்ற பகுதிகளில் மின் கம்பம் மேல் செல்லும் கம்பி வாயிலாக, மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.. ஆனால் சிலர், மின் கம்பிகளுக்கு பக்கத்திலேயே காற்றாடி விடுவதால் மாஞ்சா நூல் கம்பியில் சிக்கி கொள்கிறது.

இதனால், காற்றாடியை எடுக்க முயலும்போது, மின் விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகிறது... மேலும், மின் கம்பத்தில் உள்ள சாதனங்களில் காற்றாடி, நூல் சிக்கி கொள்வதால் பழுதாகி, மின் தடையும் ஏற்படுகிறது.
அபாயம்: எனவேதான், "மின் கம்பிகள், கம்பங்கள் அல்லது மின் கோபுர கம்பிகள் அருகே காற்றாடி பறக்க பறக்க விடாதீர்கள்.. மழை காலங்களில் மின் கம்பிகளுக்கு அருகில் காற்றாடி பறக்க விடுவதை தவிர்க்கவும்.. இது நீர் கடத்து திறனை அதிகரிக்கலாம்... இதனால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது" என்று மின்வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
-
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஹோட்டல்களுக்கு குட் நியூஸ்..! 23ஆம் தேதி முதல் கூடுதல் வணிக சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு! -
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்












Click it and Unblock the Notifications