மின்சார பில் கட்டியாச்சா? "கணக்கை முடிச்சிடுங்க".. மின்வாரியம் போட்ட அதிரடி உத்தரவு.. பறந்த ஆபீசர்ஸ்
சென்னை: மின்வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. அத்துடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கையையும் சேர்த்தே விடுத்துள்ளது.
2 நாட்களுக்கு முன்பு, மின்வாரிய பொறியாளர்களுக்கு, தலைமை நிதிக்கட்டுப்பாட்டாளர் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார்.. அதில், "மாநிலம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும். நுகர்வோரின் வசதிக்காகவும், உரிய வருவாயை ஈட்டவும் பழுதடைந்த மீட்டர்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

மாவட்டங்கள்: குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருச்சி, நாகை ஆகிய 5 மாவட்டங்களில் 10,000-க்கும் அதிகமான மீட்டர்கள் பழுதடைந்து உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பழுதடைந்த மீட்டர்களை மாற்றிய பிறகு, அதுகுறித்த விவரங்களை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், மாநிலம் முழுமையிலும், பழுதடைந்த மீட்டர்கள் எவ்வளவு? மின் கட்டணம் செலுத்தாதவர்கள் எத்தனை பேர் என்ற தகவலையும் தனித்தனியாக வெளியிட்டிருந்தது.
கரண்ட் பில்: அதேபோல, இந்த மாதம் 12ம் தேதி வரை 59,565 பேர் மின்கட்டணம் செலுத்தாமல் உள்ளார்களாம்.. இவர்கள் அனைவருமே, தங்களின் அவகாசத்தை தாண்டி அதாவது 10 நாட்களுக்கும் மேலாக, கரண்ட் பில் கட்டாமல் இருக்கிறார்களாம்.. இந்த மின் கட்டணம் மட்டும் 47.26 கோடியாகும்.. இவர்கள் அனைவருமே உடனடியாக பில் கட்ட வேண்டும் என்றும், அவர்களின் இணைப்புகளில் மின் வினியோகத்தை துண்டிப்பதுடன், கட்டணத்தை விரைந்து வசூலிக்குமாறும் மின் வாரியம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இன்னொரு வார்னிங்கையும் மின்துறை தந்துள்ளது.. அதாவது, வீடுகளில் 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கு எடுப்பது நடைமுறையில் உள்ளது.. இப்படி கணக்கெடுத்த, 20 நாட்களுக்குள் கரண்ட் பில் கட்டிவிட வேண்டும், இல்லாவிட்டால் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டு விடும். இதுவும் நடைமுறையில் உள்ளது.. இதேபோல் வணிகம், தொழிற்சாலை உள்ளிட்ட ஒவ்வொரு பிரிவுக்கும், தனித்தனி அவகாசம் தரப்பட்டுள்ளது.
ஆய்வு கூட்டம்: ஆனால், சிலர், இந்த அவகாசத்தை தாண்டியும் கரண்ட் பில் கட்டாமல் இருக்கிறார்களாம்.. எனினும் அவர்களுக்கு மின்சாரம் துண்டிப்பதில்லை. இதனால், மின் வாரியத்திற்கு வருவாய் இழப்பு மட்டுமே ஏற்பட்டு வருகிறது. இதன்காரணமாகத்தான், சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில் வருவாய் அதிகரிப்பு தொடர்பாக, தலைவர் ராஜேஷ் லக்கானி, மின் பகிர்மான வட்ட துணை நிதி கட்டுப்பாடு அதிகாரிகளுடன், 2 நாட்களுக்கு முன்புகூட ஆய்வு நடத்தியிருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்த மின்துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, 2 வருடங்களுக்கு மேல் மின் கட்டணம் செலுத்தாமல் உள்ள மின் இணைப்புகளின் கணக்கை நிரந்தரமாக முடிக்க, அதிகாரிகளுக்கு அந்த ஆய்வு கூட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.
தவறுகள்: மேலும், துணை நிதி கட்டுப்பாட்டு அதிகாரிகள், கணக்கீட்டு அதிகாரிகள் உள்ளிட்டோர், மாதத்தில் 5 முதல், 10 நாட்கள் வரை, மின் இணைப்பு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தொடர்ந்து கள ஆய்வு செய்வதன் வாயிலாக, முறைகேடாக மின்சாரம் பயன்படுத்துவது போன்ற தவறுகள் தடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications