விஜய்க்கு 120 சீட்.. படித்தவர்கள் அதிகமாக தவெகவிற்கு ஓட்டளிப்பு! திமுகவிற்கு அதிர்ச்சி.. Axis My India Exit Poll டேட்டா
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவை விட முந்தி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 98 முதல் 120 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனத்தின் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த கருத்து கணிப்பில் பட்டம் படித்தவர்கள், பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் அதிகளவில் தவெகவிற்கு வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் வென்று யார் ஆட்சியை பிடிப்பார்கள்? என்பது தொடர்பான எக்ஸிட் போல் கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 'ஆக்சிஸ் மை இந்தியா' (Axis My India) கருத்து கணிப்பில் திமுக, அதிமுகவை முந்தி விஜயின் தவெக அதிக இடங்களை கைப்பற்றும் எனவும், தனித்து கூட ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்து கணிப்பு தமிழகத்தில் அனைவரின் புருவத்தையும் உயர்த்த செய்துள்ளது. இந்த கருத்து கணிப்பின்படி திமுக 35 சதவீதம், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 35 சதவீதம் வாக்குகளை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அதிமுக 23 சதவீத வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 3 சதவீத வாக்குகளையும், மற்றவர்கள் 4 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
தவெகவிற்கு 98 –120
இந்த கருத்து கணிப்பின்படி திமுக கூட்டணி மொத்தம் 92 முதல் 110 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 98 முதல் 120 தொகுதிகள் வரை வாகை சூடலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அதேவேளையில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக 22-32 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த எக்ஸிட் போலில் படிப்பு வாரியாக மக்கள் யாருக்கு ஓட்டளித்துள்ளனர்? என்பது பற்றிய முக்கிய விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி
அதன்படி பள்ளிக்கு செல்லாதவர்களில் 41 சதவீதம் பேர் திமுகவிற்கு வாக்களித்துள்ளனர். 9 ம் வகுப்பு வரை படித்தவர்களில் 40 சதவீதம் பேரும், 10ம் வகுப்பு பாஸானவர்ளில் 36 சதவீதம் பேரும், 12ம் வகுப்பு பாஸானவர்களில் 32 சதவீதம் பேரும், டிகிரி முடித்தவர்களில் 28 சதவீதம் பேரும், பட்ட மேற்படிப்பு படித்தவர்களில் 32 சதவீதம் பேரும், பிற தொழில்நுட்ப கல்வி பயின்றவர்களில் 28 சதவீதம் பேரும் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயின் தவெக
விஜய்யின் தவெகவிற்கு பள்ளிக்கு செல்லாதவர்களில் 24 சதவீதம் பேரும்,9 ம் வகுப்பு வரை படித்தவர்களில் 28 சதவீதம் பேரும், 10ம் வகுப்பு பாஸானவர்ளில் 32 சதவீதம் பேரும், 12ம் வகுப்பு பாஸானவர்களில் 41 சதவீதம் பேரும், டிகிரி முடித்தவர்களில் 46 சதவீதம் பேரும், பட்ட மேற்படிப்பு படித்தவர்களில் 38 சதவீதம் பேரும், பிற தொழில்நுட்ப கல்வி பயின்றவர்களில் 51 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.
Post 7 of 10 - Tamil Nadu - Exit Poll - Education-wise - Vote Share (%)#TamilNaduelections2026#ExitPoll#AxisMyIndia
— Axis My India (@AxisMyIndia) April 29, 2026
@pradeepgupta_ami pic.twitter.com/hJdA3RhMIj
அதிமுக கூட்டணி
அதிமுக கூட்டணிக்கு பள்ளிக்கு செல்லாதவர்களில் 29சதவீதம் பேரும், 9 ம் வகுப்பு வரை படித்தவர்களில் 26 சதவீதம் பேரும், 10ம் வகுப்பு பாஸானவர்ளில் 25 சதவீதம் பேரும், 12ம் வகுப்பு பாஸானவர்களில் 21 சதவீதம் பேரும், டிகிரி முடித்தவர்களில் 18 சதவீதம் பேரும், பட்ட மேற்படிப்பு படித்தவர்களில் 22 சதவீதம் பேரும், பிற தொழில்நுட்ப கல்வி பயின்றவர்களில் 13 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.
சீமானின் நாம் தமிழர்
சீமானின் நாம் தமிழர் கட்சியை எடுத்து கொண்டால் பள்ளிக்கு செல்லாதவர்களில் 5 சதவீதம் பேரும், 9 ம் வகுப்பு வரை படித்தவர்களில் 4 சதவீதம் பேரும், 10ம் வகுப்பு பாஸானவர்ளில் 5 சதவீதம் பேரும், 12ம் வகுப்பு பாஸானவர்களில் 3 சதவீதம் பேரும், டிகிரி முடித்தவர்களில் 3 சதவீதம் பேரும், பட்ட மேற்படிப்பு படித்தவர்களில் 3 சதவீதம் பேரும், பிற தொழில்நுட்ப கல்வி பயின்றவர்களில் 2 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.
மற்றவர்களுக்கு பள்ளிக்கு செல்லாதவர்களில் 5 சதவீதம் பேரும்,9 ம் வகுப்பு வரை படித்தவர்களில் 4 சதவீதம் பேரும், 10ம் வகுப்பு பாஸானவர்ளில் 5 சதவீதம் பேரும், 12ம் வகுப்பு பாஸானவர்களில் 3 சதவீதம் பேரும், டிகிரி முடித்தவர்களில் 3 சதவீதம் பேரும், பட்ட மேற்படிப்பு படித்தவர்களில் 3 சதவீதம் பேரும், பிற தொழில்நுட்ப கல்வி பயின்றவர்களில் 2 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர் என ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications