இன்னுமா என்ன தெரியல.. 8000+2000.. கியரை மாற்றிய பெண் வாக்காளர்கள்! EXIT POLL-ல் ஸ்டாலின் சிக்சர்!
சென்னை: பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் தமிழக சட்டசபை தேர்தல் நிறைவடைந்து இருக்கும் நிலையில் தமிழகத்தில் திமுகவை மீண்டும் ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு கருத்துக்கணிப்புகள் அடித்து சொல்கின்றன ஒன்று இரண்டை தவிர மற்ற அனைத்து கருத்துக் கணிப்புகளும் திமுக ஆட்சியை அமைக்கும் நிலையில் மகளிர் உரிமைத்தொகை உயர்வு எட்டாயிரம் ரூபாய் கூப்பன் போன்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் பெண்களை வெகுவாக கவர்ந்திருந்ததாக சொல்லப்படுகிறது
தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு சமீபத்தில் நிறைவடைந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், வாக்குப்பதிவு முடிந்த உடனே கருத்துக் கணிப்புகளை வெளியிட முடியவில்லை.

அந்தத் தடை முடிவுக்கு வந்ததும், பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகள் தொடர்ச்சியாக வெளியாகின. அவற்றில் பெரும்பாலானவை திமுக கூட்டணிக்குச் சாதகமாக அமைந்துள்ளன. பல நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கணிப்புகளின் படி, திமுக கூட்டணி குறைந்தபட்சம் 125 முதல் 145 தொகுதிகள் வரை வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சில கணிப்புகள் இதைவிட அதிகமாகவும் கூறுகின்றன. குறிப்பாக ஒரு கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 145 முதல் 170 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது திமுக மீண்டும் வலுவான ஆட்சியை அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத காரணமாகியுள்ளது. அதே நேரத்தில் அதிமுக தலைமையிலான என்.டி,ஏ. கூட்டணியும் பல தொகுதிகளில் வலுவான போட்டி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
சில கணிப்புகளில் அதிமுக கூட்டணி 128 முதல் 147 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இறுதி முடிவு வரும் வரை அரசியல் நிலைமை எப்படி மாறும் என்பது குறித்து எதிர்பார்ப்பு நீடிக்கிறது.
இந்த தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் போட்டியில் உள்ளது. அவர்களின் கட்சிக்கு 12 முதல் 24 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக பல கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. சில கணிப்புகளில் 10 முதல் 12 தொகுதிகள் வரை மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில கணிப்புகளில் 8 முதல் 15 இடங்கள் வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் குறிப்பிடத்தக்க அளவில் வாக்குகளைப் பெற்றாலும், ஆட்சி அமைக்கும் அளவிற்கு முன்னிலை பெறுவது சாத்தியமில்லை என்றே பலர் மதிப்பிடுகின்றனர். மேலும், அதிமுக மீண்டும் முதன்மை எதிர்க்கட்சியாக உருவெடுக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் கருத்துக் கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. இதனால் நடிகர் விஜயின் முதல்வர் கனவு இந்த முறை நிறைவேறாமல் போகும் வாய்ப்பு அதிகம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்த தேர்தலில் அதிகமாக பேசப்பட்ட அம்சங்களில் ஒன்றாக பெண்கள் வாக்காளர்களின் ஆதரவு அமைந்துள்ளது. குறிப்பாக, மாதந்தோறும் வழங்கப்படும் 2000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகையை உயர்த்தி 8000 ரூபாயாக மாற்றும் வாக்குறுதி, அதோடு குடும்பங்களுக்கு வழங்கப்படும் கூடுதல் நிதி உதவி போன்ற அறிவிப்புகள் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் பெண்கள் வாக்காளர்கள் கணிசமான அளவில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்திருக்கலாம் என்ற கருத்து அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
திமுக அரசு (2021 முதல்) மகளிருக்கு மாதம் ₹1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் (விடியல் பயணத் திட்டம்) மற்றும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் போன்ற முக்கிய சமூக நலத்திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றியது.
இதுவரை ஆட்சியில் இருக்கும் திமுக ஆயிரம் ரூபாய் நிதியை 2000 ரூபாயாக வழங்கும் என்ற நம்பிக்கையும் எட்டாயிரம் ரூபாய் கூப்பனும் இந்த தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. புதிதாக ஆட்சிக்கு வரும் அதிமுக தரும் நிதியை விட ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் திமுக நிதியை உயர்த்தி தருவது பெண்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறது.
அது மட்டும் அல்லாமல் முதலமைச்சர் காலை உணவு திட்டம், மக்களை தேடி மருத்துவம், புதுமைப்பெண் திட்டம், புதுமை பள்ளி திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், தோழி மகளிர் விடுதிகள் என ஏராளமான திட்டங்கள் பெண் வாக்காளர்களையும் கல்லூரி மாணவிகளையும் கவர்ந்ததாக கூறப்படுகிறது. அதனால் தான் திமுக பெண்களின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்துள்ளது என்கின்றனர் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள்.












Click it and Unblock the Notifications