ஜன்கிபாத் எக்ஸிட் போல் முடிவுகள்.. தமிழகத்தில் அதிமுகவுக்கு பலத்த அடி.. பாஜகவுக்கு சர்ப்ரைஸ்
சென்னை: தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 34 முதல் 38 இடங்கள் கிடைக்கும் என்றும் அதிமுகவுக்கு ஒரு இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் பாஜகவுக்கு சர்ப்ரைசாக 5 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக ஜன்கிபாத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.
நாடு முழுக்க 543 மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக பொதுத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் 4 ஜூன் 2024 அன்று அறிவிக்கப்படும். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்தது.

மத்தியில் ஆளும் பாஜக ஹாட்ரிக் முறையாக ஆட்சியை பிடிப்போம் என்று நம்பிக்கையுடன் கூறி வருகிறது. அதேவேளையில், பாஜகவை இந்த முறை வெல்ல விட மாட்டோம் என்ற வியூகத்துடன் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள், பாஜகவை வீழ்த்துவோம் என்று கூறி வருகிறது.
ஜூன் 04 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகளை நாடே எதிர்பாத்துக்கொண்டு உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அதன்படி ஜன்கிபாத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கே அதிக இடங்கள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.
ஜன்கிபாத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களில் வெற்றி பெறும் என்றும், அதிமுகவுக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைக்கும் என்றும், பாஜகவுக்கு 5 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அதிமுக பாஜக மோதல் காரணமாக பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக அதிரடியாக அறிவித்தது. அதோடு இந்த தேர்தலில் அதிமுக தனித்தே போட்டியிட்டது. அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து இருந்தது. இதேபோல் பாஜகவும் தங்களுக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக கூறி டிடிவி தினகரன், ஓ பன்னீர் செல்வம், பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது.
மேலும் பிரதமர் மோடி தெற்கில் பாஜக வளர வேண்டும் என்ற நோக்கில் தமிழகத்தில் தீவிர பிரசாரம் செய்தார். அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களும் இந்த முறை பாஜகவுக்கு தமிழ்நாட்டில் ஆதரவு இருக்கும் என்றும், தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் நம்பிக்கை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ஜன்கிபாத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் 5 இடங்கள் கிடைக்கும் என்று கணித்துள்ளது.
ஜன்கிபாத் கருத்துக்கணிப்பு முடிவுகள்:
திமுக கூட்டணி - 34 இடங்கள்
அதிமுக கூட்டணி - 1 இடம்
பாஜக கூட்டணி - 5 இடங்கள்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications