தமிழகத்தில் இரட்டை இலக்கில் வெல்லும் பாஜக கூட்டணி! அதிமுகவுக்கு பெரிய இடி! டுடே சாணக்யா எக்சிட் போல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் முதல்முறையாக லோக்சபா தேர்தலில் பாஜக இரட்டை இலக்கில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக டுடே சாணக்யா செய்தி நிறுவனம் தனது எக்ஸிட் போல் முடிவுகளில் கூறியுள்ளது. குறிப்பாக அதிமுகவை விட பாஜக கூடுதல் வாக்குகளைப் பெறும் என்று இந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

நமது நாட்டில் மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் முதலே நாடு முழுக்க பல்வேறு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றது.. இன்று கடைசிக் கட்டமாக 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

Lok Sabha Election 2024 Lok Sabha Election Exit Poll BJP Congress

லோக்சபா தேர்தல்: நாடு முழுக்க 543 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில், அதில் 272 தொகுதிகளில் வெல்லும் கட்சியால் மட்டுமே ஆட்சியைப் பிடிக்க முடியும். இந்த முறை நமது நாட்டில் தேசியளவில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவி வருகிறது. இதனால் கடந்த சில மாதங்களாகப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வந்தது.

தமிழ்நாடு லோக்சபா தேர்தல்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கு மொத்தம் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இங்குள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகக் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இப்போது லோக்சபா தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், இப்போது பல்வேறு செய்தி நிறுவனங்களும் வரிசையாக எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டு வருகிறது.

திமுக கூட்டணி: அதன்படி இப்போது டுடே சாணக்யா என்ற நிறுவனம் தமிழ்நாட்டில் நடத்திய எக்சிட் போல் முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. இதில் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. திமுக கூட்டணி இந்த முறை 29 (Plus / Minus 5) இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.

பாஜகவுக்கு பெரிய வெற்றி: அதேநேரம் பாஜகவின் என்டிஏ கூட்டணி இரட்டை இலக்கில் வெல்ல வாய்ப்புள்ளதாக டுடே சாணக்யா தெரித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் பாஜக 10 இடங்களில் (Plus / Minus 4) டுடே சாணக்யா தெரிவித்துள்ளது. அதேநேரம் அதிமுக ஒரு இடத்திலும் வெல்ல வாய்ப்பு இல்லை என்று டுடே சாணக்யா தனது எக்ஸிட் போல் முடிவுகளில் கூறியுள்ளது.

வாக்கு சதவிகிதம்: லோக்சபா தேர்தலில் பதிவாகும் வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி 40% வாக்குகளைப் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 21% வாக்குகளைப் பெறும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், அதிமுகவைக் காட்டிலும் கூடுதலாக 34% வாக்குகளை பாஜக பெரும் என டுடே சாணக்யா எக்ஸிட் போல் முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

ஏன் முக்கியம்: தமிழ்நாட்டில் பாஜக கடந்த முறை ஒரு சீட்டில் கூட வெல்லவில்லை.. நாடு முழுக்க மோடி அலை வீசிய 2014 தேர்தலிலும் கூட பாஜக தமிழகத்தில் ஒரு சீட்டில் மட்டுமே வெல்ல முடிந்தது. இந்தச் சூழலில் இந்த முறை பாஜக இரட்டை இலக்கில் வெல்லும் என்று டுடே சாணக்யா எக்ஸிட் போல் கூறியுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளது போல பாஜக 10 சீட்களில் வென்றால் அது பாஜகவுக்கு மிகப் பெரிய வெற்றியாகவே இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+