சோழிங்கநல்லூரில் பார்த்தீங்களா? தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது: கலெக்டர்களும் அதிரடி
சென்னை: மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை, மாநில தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு இன்று வெளியிட்டார். இதுபோலவே, தமிழகத்தின் மாவட்ட ஆட்சியர்களும், தங்களது இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. இதையொட்டி அரசியல் கட்சிகள், கூட்டணிகளை இறுதி செய்வது, சீட் விவகாரம், தேர்தல் அறிக்கை தயாரிப்பது, கட்சியினரை ஒருங்கிணைப்பது என பல்வேறு பணிகளில் தீவிரமாகி உள்ளனர்..

அதேபோல, தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையமும் மும்முரமாகி வருகிறது.. அந்தவகையில், வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள மற்றும் பெயர்கள் நீக்க மற்றும் சேர்க்க சிறப்பு முகாம்கள் இத்தனை நாட்களாக நடைபெற்று வந்தன.
வாக்காளர்கள்: இதில், வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது.. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.. அதேபோல, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கான பணிகள் நடந்து முடிந்துள்ளன.
இதில், தமிழகத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று திருத்தங்கள் செய்து கொள்ள விண்ணப்பித்திருந்தனர்.
விண்ணப்பங்கள்: திருத்தங்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக, புயல் வெள்ள பாதிப்புகளால் விண்ணப்ப பரிசீலனை பணிகள் பாதிக்கப்பட்டன.. எனவே, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி தள்ளிப்போனதுடன், கால நீட்டிப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார். இதுபோலவே, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பீகார், உத்தரகான்ட், ஹரியானா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், பஞ்சாப், டெல்லி ஆகிய 12 மாநிலங்களுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி ஜனவரி 5-ல் இருந்து ஜனவரி 22ம் தேதிக்கு மாற்றப்பட்டிருந்தது.
மாவட்ட கலெக்டர்கள்: இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளதை அடுத்து, இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர்கள், அந்தந்த மாவட்டங்களுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
லிஸ்ட் இதுதான்: முன்னதாக, இறுதி வேட்பாளர் பட்டியலில், தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் முதல் இடத்திலும், கோவையில் உள்ள கவுண்டம்பாளையம் தொகுதி 2-வது இடத்திலும் உள்ளன... அதாவது, சோழிங்கநல்லூர் தொகுதி - 6,60,419 வாக்காளர்களும், கோவை கவுண்டம்பாளையம் - 4,62,612 வாக்காளர்களும் உள்ளனர்.
பிறகு, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்கள் சந்திப்பில் சொல்லும்போது, "கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை விட தற்போது கூடுதலாக 7 லட்சம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் 13.61 லட்சம் பேர் புதிதாக பெயர் சேர்த்துள்ளனர். மேலும், 6.02 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 3.23 லட்சம் வாக்களர் திருத்தம் செய்துள்ளனர்" என்றார்
தமிழ்நாடு வாக்காளர்கள் எண்ணிக்கை..!
மொத்த வாக்காளர்கள்: 6,18,90,034
பெண் வாக்காளர்கள்: 3,14,85,724
ஆண் வாக்காளர்கள்:3,03,96,330
3-ம் பாலின வாக்காளர்கள்: 8,294
மாற்றுத்திறனாளி வாக்காளர்கள்: 4,32,805
18-19 வயது வாக்காளர்கள்: 5,26,205
குறைந்தபட்ச வாக்காளர்கள் உள்ள தொகுதி: நாகை கீழ்வேளூர், 1.72 லட்சம்
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications