இந்த அறிவிப்பு மட்டும் வந்தா செமயா இருக்கும்! ஸ்டாலினின் கனவு திட்டம்! பிடிஆர் தந்த பட்ஜெட் அப்டேட்
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் கனவு திட்டம் தொடர்பாக முக்கியமான அறிவிப்பு ஒன்றை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. 2023-24ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
திமுக அரசு தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் இது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

1000 ரூபாய்
முக்கியமாக குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 கொடுக்கும் திட்டம் வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ஈரோடு கிழக்கில் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு கஜானாவை அதிமுக காலி செய்துவிட்டது. அது மீட்டு எடுக்க தாமதம் ஆகிவிட்டது. இப்போதுதான் கஜானா மீண்டு வருகிறது, என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று அது தொடர்பான அறிவிப்பு வெளியாகிறது.

கனவு திட்டம்
பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கலால் இந்த திட்டம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பல்வேறு காரணங்களுக்காக இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இன்று ஒருவழியாக திட்டம் தொடங்கும் தேதி அறிவிக்கப்படும். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் முதல்வர் ஸ்டாலினின் கனவு திட்டம் ஒன்றை பற்றிய முக்கிய அறிவிப்பும் இன்றும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு
இந்த பட்ஜெட் தொடர்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முக்கியமான சில அப்டேட்களை வெளியிட உள்ளார். இளைஞர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தனது பேச்சில், வேலைவாய்ப்பு உருவாக்குவதுதான் அரசின் கொள்கை. கடந்த இரண்டு வருடத்தில் அதற்கு ஏற்ற திட்டங்களை வகுத்து இருக்கிறோம். மக்கள் பலருக்கு வேலை கிடைக்கும் விதமாக திட்டங்களை வகுத்து உள்ளோம். இதனால் வேலை வாய்ப்பு முன்பை விட தற்போது அதிகமாகி உள்ளது. இந்த பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகளை வெளியிடுவோம். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பல புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும். முக்கியமாக சுயதொழில் செய்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்.

ஸ்டார்ட் அப்
வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும். வீட்டிற்கு ஒரு ஸ்டார்ட் அப் என்று தொடங்கினால்தான் தமிழ்நாட்டின் பொருளாதாரம் உயரும். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் டாலருக்கு உயர்த்த வேண்டும் என்பது முதல்வர் ஸ்டாலினின் கனவு திட்டம்.தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் என்ற அளவில் உயர்த்த வேண்டும் என்றால் அதற்காக வீட்டிற்கு ஒரு ஸ்டார்ட் அப் தொடங்க வேண்டும். 1 ட்ரில்லியன் பொருளாதாரத்தை அடைவதற்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும். பல துறை அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது. பல முக்கிய அறிவிப்புகள் கண்டிப்பாக பட்ஜெட்டில் இடம்பெறும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். எனவே ஸ்டாலினின் கனவான 1 ட்ரில்லியன் பொருளாதாரத்தை அடைய இன்று சில ஸ்டார்ட் அப் தொடர்பான அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.












Click it and Unblock the Notifications