சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை.. சட்டசபையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்!
சென்னை: சவுதி அரேபியா பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த சீர்காழி மீனவர் மாவீரன் என்பவர் ஈரான் கடற்கொள்ளையர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டசபையில் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் தமிழக மீனவர் மாவீரன் (வயது 39) என்பவர் பலியாகினார். சவுதி அரேபியா கடல் பகுதியில் மீன்பிடித்து வந்த சீர்காழியை சேர்ந்த மாவீரன் கடந்த 10 ஆம் தேதி கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழக சட்டசபையில் விவாதிக்க அதிமுக சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படது. இந்த தீர்மானம் 5 நாட்களாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று அதிமுக நேற்று வெளிநடப்பு செய்த நிலையில், இன்று அவையில் சிறப்பு தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படது.
இந்த தீர்மானத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "மீனவரின் உடலை தமிழகத்திற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ தளி ராமச்சந்திரன் கூறுகையில், "உயிரிழந்த மீனவர் மாவீரன் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.


Click it and Unblock the Notifications
