கோவையில் பரபரப்பு.. தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மருத்துவமனையில் திடீர் அட்மிட்.. என்னாச்சு
சென்னை: தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது திமுக வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
டாக்டர் மதிவேந்தன்.. நாமக்கல்லில் சாந்தி மருத்துவமனையை நடத்தி வருகிறார்... தற்போது வனத்துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார் மதிவேந்தன்.. ஏற்கனவே இவர் நாமக்கல்லில் சட்டமன்ற தொகுதியிலும், ராசிபுரம் எம்பி தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்..
வைகோ: அன்று, வைகோ திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டபோது அவருடனேயே சேர்ந்து வெளியேறியவர் மதிவேந்தன்.. பிறகு மதிமுகவில் சேர்ந்தார்.. பிறகு மறுபடியும் திமுகவுக்கே வந்தார்.

கடந்த 2021 தேர்தலில், முன்னாள் அமைச்சர் சரோஜாவை தோற்கடித்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.. இறுதியில் சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி இவரை தேடிவந்தது.. பிறகு, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றபோது, சில அமைச்சரது துறைகள் மாற்றப்பட்டது. அப்போது, மதிவேந்தனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த சுற்றுலாத்துறை இவரிடமிருந்து பறிக்கப்பட்டு, அமைச்சர் ராமச்சந்திரனுக்கு ஒதுக்கப்பட்டது.
துறை மாற்றம்: திடீரென அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டது பரபரப்பாக அப்போது பேசப்பட்டது.. காரணம், சுற்றுலாத்துறை என்ற வளம் கொழிக்கும் துறையை ஒதுக்கீடு செய்தும்கூட, மதிவேந்தனின் செயல்பாடுகள் முதல்வருக்கு திருப்தியை தரவில்லை என்று சொல்லப்பட்டது..
படித்தவர், டாக்டர் என்பதால் சுற்றுலாத்துறையை சிறப்புடன் நிர்வகிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அமைச்சரின் செயல்பாடுகள் குறித்த ரிப்போர்ட்களால் அதிருப்தி கொண்டாராம் ஸ்டாலின். எனவே, சுற்றுலாத்துறை பதவி பறிக்கப்பட்ட நிலையில், அமைச்சரவை மாற்றத்தின்போது மதிவேந்தன் மீண்டும் இடம்பெறுவாரா என்றெல்லாம் திமுகவில் பேச்சுக்கள் அடிபட்டன.
மீண்டும் நியமனம்: ஆனால், துறையை மட்டும் மாற்றி தந்து, மதிவேந்தனுக்கு இன்னொரு வாய்ப்பை தந்தார் முதல்வர் ஸ்டாலின். வனத்துறை அமைச்சராக மதிவேந்தன் நியமனம் செய்யப்பட்டார்.
இதற்குபிறகு, தனக்கு ஒதுக்கப்பட்ட துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து முதல்வரின் பாராட்டுக்களை பெற்றே தீர்வது என்ற முடிவெடுத்து, தீவிரமாகவும், திறன்படவும் செயலாற்ற துவங்கினார் மதிவேந்தனர்.. பல்வேறு அதிரடிகளையும் வனத்துறை சார்பாக மேற்கொண்டு வருகிறார்.
ஆபரேஷன்: இந்நிலையில், சமீபகாலமாகவே, அமைச்சர் மதிவேந்தனுக்கு குடலிறக்கம் இருந்து வந்துள்ளது. இதனால், அவதிப்பட்டு வந்த அவருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் ஆலோசனை சொல்லி உள்ளனர்.. பிரதமர் மோடியுடன் ராமேஸ்வரம் நிகழ்வுகளிலும் பங்கேற்றிருந்த நிலையில், உடல்நிலை மேலும் குன்றியது..
இதையடுத்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார் அமைச்சர் மதிவேந்தன்.. தற்போது அவருக்கு அறுவை சிகிச்சையும் நடந்து முடிந்துள்ளது.. டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் அமைச்சர் நன்றாக இருக்கிறார்.. பூரண நலத்துடன் இருப்பதாகவும், அவர் இன்று அல்லது நாளை வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் அனுமதிக்கப்பட்டு இருப்பதால், மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
ஒப்புதல்: தற்போது, அமைச்சர் மதிவேந்தன், கோவை மருத்துவமனையின் 4-வது மாடியில் உள்ள அறை எண் 103-ல் தங்கி உள்ளதாகவும், அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற நிலையில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதால் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனால், மற்ற அமைச்சர்கள் அனைவரும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications