உதவிய டிச.5! வரலாற்றில் இதுவரை இப்படி நடந்ததே இல்லை! பத்திரப் பதிவுத் துறையில் புதிய மைல்கல்!
சென்னை: தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் ரூ 1,984 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக பத்திரப் பதிவுத் துறை தெரிவித்துள்ளது. இது வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வருவாய் ஈட்டுவதில் முக்கிய துறையாக விளங்குவது பதிவுத் துறை. இந்நிலையில், இத்துறையின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த நவம்பர் மாதத்தில் ரூ.1,984.02 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த 2023 நவம்பர் மாதத்தைவிட கூடுதலாக ரூ.301.87 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 5-ம் தேதி கார்த்திகை மாத சுபமுகூர்த்த நாளில் ஆவணங்கள் அதிக அளவில் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் என்பதால் சிறப்பு நிகழ்வாக, மக்கள் பயன் பெறும் வகையில் முன்பதிவு டோக்கன் எண்ணிக்கை 100-ல் இருந்து 150 ஆக உயர்த்தப்பட்டது.இந்த டோக்கன்களை பயன்படுத்தி, கடந்த 5-ம் தேதி ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் ரூ.238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒருநாள் வருவாய் வசூலில் புதிய மைல்கல்லை பதிவுத் துறை எட்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நிலங்களை பதிவு செய்வது என்பது கட்டாயமானதாகும். இது போல் பத்திரங்களை பதிவு செய்வதற்கு பத்திரப்பதிவு துறை இருக்கிறது. இந்திய பதிவு சட்டத்தின்படி 100 ரூபாய்க்கு மேல் எந்த ஒரு சொத்தை எந்த விதத்தில் மாற்றினாலும் அது எழுத்துப்பூர்வமாக சம்பந்தப்பட்ட துணை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
ஒரு சொத்தை வாங்குவதற்கு முன்பு அதில் ஏதேனும் வில்லங்கம் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அதன் பிறகு அந்த சொத்துக்கு எத்தனை உரிமையாளர்கள் இருக்கிறார்கள், அதன் மீது ஏதேனும் கடன் பெறப்பட்டிருக்கின்றனவா, மூல பத்திரம் உரிமையாளரிடம் இருக்கிறதா, இல்லாவிட்டால் வங்கியில் மூலபத்திரத்தை அடமானம் வைத்து பணம் பெறப்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும். அதுதான் ஒரு சொத்தை பிறரிடம் இருந்து வாங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அம்சங்களாகும். இதை பலர் பார்க்காமலும் விஷயத்தை தெரியாமலும் சொத்தை வாங்கி பிறகு அதனால் ஏற்படும் வில்லங்கங்களை சந்திக்க நேரிடுகிறது. இதனால் காசை செலவு செய்தும் நிம்மதி இல்லாமல் போலீஸ் ஸ்டேஷனுக்கும் கோர்ட்டுக்கும் அலைய வேண்டிய சூழல் நிலவுகிறது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications