தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு.. கலந்துகொள்ள அரிய வாய்ப்பு.. இதை நோட் பண்ணுங்க!
சென்னை: தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதிநிதிகள், மாணவர்கள் கலந்து கொண்டு முதலீடுகளை, நிகழ்ச்சிகளை நேரில் பார்வையிட முடியும். நீங்கள் ஒரு வணிக நிறுவனம், கல்வி, ஆராய்ச்சி நிறுவனம் அல்லது ஸ்டார்ட் அப் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தினால், இந்த https://tngim2024.com/registration லிங்கை கிளிக் செய்து பதிவு செய்யலாம்.
தமிழ்நாட்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வான தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு (TNGIM - டிஎன்ஜிஐஎம் ) 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. டிஎன்ஜிஐஎம் 2024 முதலீட்டாளர்கள், உலக நாட்டு வல்லுனர்கள், நிர்வாக தலைகள் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைக்கும் நிகழ்வு ஆகும்.

நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும், டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கியும் தமிழ்நாட்டை கொண்டு செல்லும் வகையில் இந்த தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் கொண்டு வரவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் கொண்டு வரவும் இந்த மாநாடு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
சென்னையில் நடக்கும் உள்ள இந்த முதலீட்டாளர்கள் ,மாநாடு மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. 3 லட்சம் கோடிக்கு முதலீடுகளை கொண்டு வர தமிழ்நாடு அரசு ஆலோசனைகளை செய்து வருகிறது. தமிழ்நாடு 2 ஆண்டுகளில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இதை மேலும் அதிகரிக்கும் விதமாக இந்த மாபெரும் மாநாடு நடத்தப்பட உள்ளது.
ஃபாக்ஸ்கான் தொடங்கி பல பெரிய நிறுவனங்கள் இதில் முதலீடு செய்யும் வாய்ப்புகள் உள்ளன. கூகுள், டெஸ்லா போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வரும் என்ற எதிர்ப்பார்ப்புகள் கூட உள்ளன.
பல்வேறு நாட்டு அரங்குகள்: இந்த நிகழ்வில் பல்வேறு நாட்டு அரங்குகள், ஈர்க்கக்கூடிய தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் புதுமையான ஸ்டார்ட் அப்கள் இடம்பெறும். தமிழ்நாட்டின் தொழில்துறையினர் நமது வியக்கத்தக்க சாதனைகள் மற்றும் திறன்களை உலகிற்கு வெளிப்படுத்த இது ஒரு வாய்ப்பாகும். அதை செய்யும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள், அமைப்புகள் இங்கே உள்ளன.
பல தொழில்துறை தலைவர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வையாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்வில் பிரநிதிகள், மாணவர்கள் கலந்து கொண்டு முதலீடுகளை, நிகழ்ச்சிகளை நேரில் பார்வையிட முடியும். நீங்கள் ஒரு வணிக நிறுவனம், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அல்லது ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பிரதிநிதித்துவப்படுத்தினால், இந்த https://tngim2024.com/registration லிங்கை கிளிக் செய்து பதிவு செய்யலாம்.
Embrace a future of advancement and prosperity – become a part of this exceptional journey!
— Guidance Tamil Nadu (@Guidance_TN) August 11, 2023
Introducing the Official Logo for the Global Investors Meet 2024!#TNGIM2024 #TNIsReady #InvestInTN #MakeInTN #ThriveInTN pic.twitter.com/iQyrmmYN6y
அதேபோல் மாணவர்களும் இதே லிங்கை கிளிக் செய்து பதிவு செய்யலாம்.
பங்கேற்கும் உலக நாடுகள்: தமிழ்நாட்டில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பார்ட்னர் நாடாக வருவதற்கு பல்வேறு உலக நாடுகள் முன்வந்துள்ளன. இதனால் இந்த மாநாடு மிகப்பெரிய அளவில் உருவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அமெரிக்கா
பிரான்ஸ்
ஆஸ்திரேலியா
UK
ஜப்பான்
தென் கொரியா
ஜெர்மனி
டென்மார்க்
சிங்கப்பூர்
தைவான் ஆகிய நாடுகள் இந்த மாநாட்டிற்கு பார்ட்னர் நாடுகளாக வந்துள்ளன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications