ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு! ஒரே நாளில் தீர்வு.. குஷியில் சென்னை
சென்னை: தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழக அரசு ஸ்பெஷல் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. பொதுவினியோக திட்டத்தில் உள்ள குறைகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காணவும், மாதந்தோறும் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.. இப்போது அதுகுறித்துதான், முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. அதிலும், அனைத்து அட்டைதாரர்களுக்கு மிக குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்பு போன்ற உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன..

வெள்ள நிவாரண நிதி
இதைத்தவிர, பொங்கல் பரிசு, வெள்ள நிவாரண நிதி போன்றவைகள் உட்பட, அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும், இந்த ரேஷன் கார்டு மூலமாகவே வழங்கப்பட்டு வருக்னறன, இதன்காரணமாக கோடிக்கணக்கான மக்கள் பெரும்பலனை பெற்று வருவதுடன். ஏழை, எளிய, வாழ்வாதாரமும் காக்கப்படுகிறது.
அதேபோல, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தல், செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை சொல்லுதல் போன்றவைகளையும், தமிழக அரசு தீர்த்து வைத்து வருகிறது.. இப்படி பொதுமக்களின் குறைகளையும், புகார்களையும், அதிருப்திகளையும் நிவர்த்தி செய்வதற்காகவே, குறைதீர்ப்பு முகாம்களை தமிழக அரசு ஒவ்வொரு மாதமும், மாவட்டந்தோறும் நடத்தி வருகிறது.
குடும்ப அட்டைதாரர்கள்
இதுபோன்ற முகாம்கள் மூலம், குடும்ப அட்டைதாரர்களுக்கு உள்ள குறைகள் நேரடியாக கேட்கப்பட்டு, அவை உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டும் வருகின்றன.. அந்தவகையில், தற்போதும் சென்னைவாசிகளுக்கு, அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.
சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகிற 10-ந்தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தமிழக அரசு அறிக்கை
"பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் சென்னையை பொறுத்தவரை மண்டல அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் இரண்டாம் சனிக்கிழமை நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அதன்படி மே 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 10.05.2025 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டைகள் - குறைபாடுகள்
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் அங்கீகாரச்சான்று உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications