ஹூஸ்டன் பல்கலை. தமிழ் இருக்கை: தமிழக அரசு ஏற்கனவே நிதி.. பிரதமர் மோடி அறிவிப்பு குறித்து மா.சு பதில்
சென்னை: ஹூஸ்டன் தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க இந்திய அரசு நிதி உதவி அளிக்கும் என்று பிரதமர் மோடி கூறிய நிலையில், தமிழ் இருக்கை அமைக்க ஏற்கனவே தமிழக அரசு நிதி செய்து இருப்பதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தொடர்ந்து இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி ஹூஸ்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் இந்திய அரசு உதவியுடன் தமிழ் இருக்கை நிறுவப்படும் என்று கூறினார்.

இது குறித்து தமிழக அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மா.சுப்ரமணியன், தமிழ் இருக்கை அமைக்கும் பணிகளை ஏற்கனவே தமிழக அரசு செய்து வருகிறது' என்றார். இது குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியதாவது:- ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ஏற்கனவே தமிழக அரசு நிதி அளித்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
அவர்களுடம் கூட முதல்வரையும் தமிழ் துறை அமைச்சரையும் ஹூஸ்டனுக்கு அழைத்து தொடர்ந்து கடிதம் எழுதி இருக்கிறார்கள" என்றார். அப்போது மோடியின் தற்போதைய அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. இதற்கு பதிலளித்த மா சுப்ரமணியன், அது அவர் (மோடி) பண்ணுறத பண்ணட்டும்' என உடனடியாக பிரஸ்மீட்டை முடித்துக் கொண்டு கிளம்பினார்.












Click it and Unblock the Notifications