Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பத்திரப்பதிவில் மாற்றம்.. ஈர்த்த சார் பதிவாளர்கள் ஆபீஸ்.. கலக்கும் சென்னை அப்பார்ட்மென்ட்கள்.. பலே

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், பல்வேறு அறிவிப்புகளையும், சலுகைகளையும் பத்திரப்பதிவு வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், ஒரு மகிழ்ச்சி செய்தியை பதிவுத்துறை தற்போது வெளியிட்டிருக்கிறது.

அரசின் மற்ற துறைகளை போலவே பத்திரப்பதிவு துறையும் முழுக்க முழுக்க ஆன்லைன்மயமாகிவிட்டது.. அதேபோல, ஒவ்வொரு வருடமும் வருவாய் இலக்கு நிர்ணயித்து, பத்திரப்பதிவு துறை செயல்பட்டு வருகிறது.

Tamil Nadu Government and increase in number of deed registrations in Chennai, information from TN registrar

அந்தவகையில், இந்த வருடம் இதுவரை ரூ.8,000 கோடி கூடுதல் வருவாய் பத்திரப்பதிவுத் துறையில் கிடைத்துள்ளது. ஆனால், நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ ரூ.25,000 கோடி வருவாய் ஆகும்.. எனவே, இந்த இலக்கை எட்டி பயணப்பட்டு வருகிறது. இதற்காகவே, பல்வேறு அதிரடிகளையும், அறிவிப்புகளையும், வெளியிட்டு வருவதுடன், பொதுமக்களுக்கான சலுகைகளையும் வாரி வழங்கி வருகிறது.

சுபமுகூர்த்த தினம்: அதன் ஒருபகுதியாக, சுபமுகூர்த்த தினங்களில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக, ஒவ்வொரு நாளும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 100 டோக்கன்கள் விநியோகிக்கப்படும்.

ஆனால் முகூர்த்த நாட்களில் மட்டும், பத்திரப்பதிவு சற்று அதிகமாகவே நடக்கும் என்பதால், அந்த நாட்களில் கூடுதலாக டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, சில விடுமுறை நாட்களிலும் கூடுதல் பத்திரப்பதிவை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை விடுத்து வந்ததால், அதற்கேற்றபடியும் விசேஷ டோக்கன்கள் கூடுதலாக விநியோகிக்கப்படுகின்றன.

டோக்கன்கள்: கடந்த தை மாதம் துவக்கத்தின்போதுகூட சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது.. தை மாதம் என்பதால், பத்திரப்பதிவு அதிகம் நடக்கக்கூடும்.. எனவே, இந்த மாதம் முழுவதும் கூடுதல் டோக்கன்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தெரிவித்திருந்தார்.

அதன்படி, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் என தகவல் வெளியாகியிருந்தது.

ஆவணப்பதிவுகள்: பொங்கலுக்குப்பிறகு ஜனவரி 31 வரை அனைத்து வேலை நாட்களிலும் பத்திரப் பதிவுக்கான டோக்கன்களை கூடுதலாக வழங்க உத்தரவிடப்பட்ட நிலையில், ஆவணப்பதிவுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மகிழ்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உள்ளதாவது:

"ஜனவரி 31-ம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் கூடுதலான டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டது. குறிப்பாக, நேற்று முன்தினம் (ஜனவரி22) மட்டும் 21,004 பத்திரங்கள் பதியப்பட்டு அதன் மூலம் அரசுக்கு ரூ.168.83 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.

பெருத்த நம்பிக்கை: புதிய கூட்டு வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் ஜனவரி 22-ம் தேதி சென்னையில் பதியப்பட்ட 137 அடுக்குமாடி குடியிருப்பு பதிவுகளும் அதன்மூலம் பெறப்பட்ட ரூ.12 கோடி வருவாயும் இதில் அடங்கும். இனி வரும் நாட்களிலும் பதிவுகள் எண்ணிக்கை அதிகரிக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+