தீபாவளி போனஸ் அறிவிப்பு.. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% போனஸ்.. முதல்வர் ஸ்டாலின் சிக்ஸர்!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்குப் போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தீபாவளியை முன்னிட்டு இந்த போனஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்து கழகம் தமிழ்நாடு நுகர்பொருள் வாரிய கழகம், தமிழ்நாடு வளத்துறை உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை ஊழியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தீபாவளியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் போனஸ் வழங்கப்படும். அதன்படியே இந்த ஆண்டும் அரசு சார்பாக போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2.95 லட்சம் ஊழியர்களுக்கு மொத்தமாக இந்த போனஸ் வழங்கப்படும். உபரித்தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களுக்கு 8.66% வரை போனஸ் வழங்கப்படும். 20 சதவீதம் போனஸ் வழங்க ரூ.376 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 20 சதவீதம் ஊதியம் மற்றும் கருணைத் தொகை போனஸாக வழங்கப்படும்; நிரந்தர பணியாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8400 மற்றும் அதிகபட்சம் ரூ.16,800 போனஸாக பெறுவார்கள் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
அகவிலைப்படி
அதேபோல் தீபாவளிக்கு முன்பாக அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி பண்டிகைக் காலத்திற்கு முன்பாக அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி (DA) மூன்று சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு ஜூலை 1 முதல் (பின்தேதியிட்டு) அமலுக்கு வரும். தமிழக அரசும் இதே அளவு அகவிலைப்படியை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வு வருவது இது இரண்டாவது முறை. கடந்த மார்ச் மாதம் இரண்டு சதவீத உயர்வு அறிவிக்கப்பட்டது. அப்போது அகவிலைப்படி அடிப்படைச் சம்பளத்தில் 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக உயர்ந்தது. இதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னர், அதாவது கடந்த ஆண்டு அக்டோபரில் மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வு
அகவிலைப்படி என்பது அரசு ஊழியர்களுக்கு பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுசெய்வதற்காக வழங்கப்படுகிறது. இந்த மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு, தொழில்துறை ஊழியர்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டின் (CPI) அடிப்படியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருமுறை வழங்கப்படும் அகவிலைப்படி திருத்தங்களுக்கு இந்த தரவுகள்தான் அடிப்படை.
இந்த புதிய உயர்வு காரணமாக, அடிப்படைச் சம்பளம் ரூ. 60,000 உள்ள ஊழியருக்கு, மார்ச் மாத உயர்விற்குப் பிறகு கிடைத்த ரூ. 33,000 அகவிலைப்படியுடன் சேர்த்து, கூடுதலாக ரூ. 34,800 கிடைக்கும்.
அகவிலைப்படி உயர்வு கணக்கிடும் முறை
இந்த 3% அகவிலைப்படி உயர்வு ஊழியர்களுக்கு எப்படிப் பிரதிபலிக்கும் என்பதைப் பார்ப்போம். உதாரணமாக, ஒரு ஓய்வூதியதாரரின் அடிப்படை ஓய்வூதியம் ₹9,000 ஆக இருந்தால், தற்போது 55% அகவிலப்படி அடிப்படையில் ₹4,950 கிடைக்கிறது. மொத்தமாக ₹13,950 பெறுகிறார். DA 58% ஆக உயர்ந்தால், அவர் ₹5,220 பெறுவார். இதன் மூலம் மொத்தமாக ₹14,220 கிடைக்கும். அதாவது, மாதத்திற்கு ₹270 கூடுதலாகப் பெறுவார்.
அதேபோல, ₹18,000 அடிப்படை ஊதியம் பெறும் ஒரு ஊழியருக்கு, தற்போது 55% DA உடன் ₹9,900 கிடைக்கிறது. மொத்தமாக ₹27,900 ஆகிறது. DA 58% ஆக உயரும்போது, ₹10,440 ஆக அதிகரித்து, மொத்த ஊதியம் ₹28,440 ஆக உயரும். இதன் மூலம் மாதத்திற்கு ₹540 கூடுதலாகக் கிடைக்கும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications