‛நோ ஸ்டேன்டிங்’.. கிறிஸ்துமஸ் - தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர் போறீங்களா! 640 சிறப்பு பஸ்கள் ரெடி
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி பயணிகளின் வசதிக்காக 640 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி சென்னை உள்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு அதிகமாக செல்வார்கள். இந்த வேளையில் மக்கள் சிரமமின்றி செல்ல வசதியாக தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
அந்த வகையில் கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு தேர்வு தொடர் விடுமுறை வர உள்ளது. இதனால் மக்கள் ஏராளமானவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து தமிழ்நாட்டில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

அதாவது கிறிஸ்த மக்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் வரும் 25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கிறிஸ்தவர்கள் தயாராகி வருகின்றனர். சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் சொந்த ஊர் சென்று கிறிஸ்துமஸ் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். மேலும் அரையாண்டு தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு 10 நாள் வரை விடுமுறை வழங்கப்பட உள்ளது. இதனால் கிறிஸ்தவர்கள் அல்லாத மக்களும் குடும்பத்துடன் சொந்த ஊர் செல்ல தயாராகி வருகின்றனர்.
இவர்கள் சிரமமின்றி சொந்த ஊர் சென்று வர வசதியாக 640 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி தினசரி இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன் வரும் 22ம் தேதி (சனிக்கிழமை) கூடுதலாக 350 பஸ்களும், அதன்பிறகு 23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கூடுதலாக 290 பஸ்களும் சென்னையில் இருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், மார்த்தாண்டம், தூத்துக்குடி, வேளாங்கண்ணி மற்றும் இதர ஊர்களுக்கு இயக்கப்பட உள்ளது.
அதேபோல் பிற நகரங்களில் இருந்து சென்னைக்கும், தென்மாவட்டங்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதுமட்டுமின்றி மக்களின் கூட்டத்தை பொறுத்து உடனடியாக கூடுதல் பஸ்களை இயக்கவும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
****
The Tamil Nadu government has announced that 640 special buses will be run for the convenience of passengers during Christmas and other holidays.












Click it and Unblock the Notifications