தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவிகிதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவிகிதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று மகிழ்ச்சியான செய்தியை முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 இலட்சத்து 87 ஆயிரத்து 250 தொழிலாளர்களுக்கு 216 கோடியே 38 இலட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலகட்டத்துக்கு முன்னர் 2018, 2019ஆம் ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச போனஸ், கருணைத் தொகை என 20 சதவிகிதம் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு 10 சதவிகிதம் போனஸ் வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு கொரோனா பொது முடக்கத்தால் சில மாதங்கள் பல்வேறு நிறுவனங்கள் இயங்காமல் இருந்தன. அதனால் கடந்த ஆண்டு அதிகபட்சமாக 10 சதவிகிதம் போனஸ் தான் வழங்கப்பட்டது. அதே போல இந்த ஆண்டும் சி பிரிவு மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 10 சதவிகிதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதல்வர் அறிவிப்பு

முதல்வர் அறிவிப்பு

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. இவர்களின் உழைப்பால்தான் நாடு சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில், இந்த ஆண்டு தீபாவளித் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் பொருட்டு 2020-2021 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

பொதுத்துறை நிறுவனங்கள் பாதிப்பு

பொதுத்துறை நிறுவனங்கள் பாதிப்பு

கொரோனா தொற்றுநோயின் முதல் அலை காரணமாக மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைந்து இருந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக, பொருளாதார விளைவுகள் அரசின் நிதிநிலையை மேலும் பாதித்துள்ளது. குறிப்பாக, அதிகமான எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணிபுரியும் அரசு நிறுவனங்களான தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் மற்றும் பல நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, ஏறத்தாழ அனைத்து வணிக நடவடிக்கைள், குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களின் வணிகம் மற்றும் செயல்பாடுகள். பாதிக்கப்பட்டுள்ள போதிலும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து ஊழியர்களுக்கும் தொடர்ந்து முழு மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.21,000 உச்ச வரம்பு

ரூ.21,000 உச்ச வரம்பு

திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன்படி, போனஸ் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000/ என உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பும் ரூ.7,000/-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 2020-2021 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை கீழ்க்கண்டவாறு வழங்கப்படும்.

போனஸ், கருணைத் தொகை

போனஸ், கருணைத் தொகை

லாபம் ஈட்டியுள்ள / நஷ்டம் அடைந்துள்ள அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் C' மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

216.38 கோடி

இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக ரூ.8,400/- பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 இலட்சத்து 87 ஆயிரத்து 250 தொழிலாளர்களுக்கு 216 கோடியே 38 இலட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10% போனஸ்தான்

10% போனஸ்தான்

பத்தாண்டுகளுக்கு பின்னர் திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு போனஸ் வழங்க உள்ளார், கொரோனா பொது முடக்கம், நிதி நிலைமை ஆகியவற்றை காரணம் காட்டி கடந்த ஆண்டு கொடுத்த அளவே இம்முறையும் கிடைக்குமா என்ற கேள்விகள் ஊழியர்கள் மத்தியில் எழுந்தன. இந்த நிலையில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் 10 சதவிகித போனஸ் கருணைத்தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+