சரியாக பொங்கலுக்கு முன்.. தமிழ்நாடு முழுக்க போன முக்கிய உத்தரவு.. இப்படி ஒரு முடிவுதான் அவசியம்!
சென்னை: பொங்கலுக்கு இடையே தமிழ்நாடு முழுக்க உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
18.01.2025 அன்று ஒருநாள் மட்டும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செயல்படுவதிலிருந்து விலக்கு அளித்து விடுமுறையும், 20.01.2025 அன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பொங்கல் பண்டிகையினை தங்களுடைய குடும்பத்துடன் கொண்டாடும் விதமாக 14.01.2025 முதல் 16.01.2025 வரை தொடர் அரசு விடுமுறை உள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்களின் 17.01.2025 அன்று வெள்ளிகிழமை விடுமுறை அளிக்க கோரிக்கை பெறப்பட்டதின் அடிப்படையில் அக்கோரிக்கைகளை ஏற்று, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், 17.01.2025 (வெள்ளிகிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அவ்விடுமுறையினை ஈடு செய்யும் வகையில் 25.01.2025 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் உத்திரவிட்பட்டுள்ளது.
எனவே, மேலே குறிப்பிட்டுள்ளபடி 17.01.2025 வரை தொடர் விடுமுறை உள்ள நிலையில் அதன்பின் வரும் 18.01.2025 அன்று சனிகிழமையில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 18.01.2025 அன்று ஒருநாள் மட்டும் செயல்படுவதிலிருந்து விலக்கு அளித்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தை மாதத்தின் முதல் வேலை நாளான 20.01.2025 அன்று சுபமுகூர்த்த தினமாக உள்ளதால், அன்று அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
இதனை ஏற்று, 20.01.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளோடு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு நீட்டிப்பு:
இது போக தற்போது ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாடு அரசு அறிவிப்பில், 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தார்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும். இதன் மூலம் மொத்தமாக 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள் என்று அறிவித்து உள்ளனர்.
இந்த பரிசுத்தொகை பொங்கலுக்கு பிறகும் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு பொங்கல் முடிந்தும் சில நாட்களுக்கு வாங்கிக்கொள்ளும் வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்











Click it and Unblock the Notifications