இதுதான் தேவை! வீடு வீடாக கதவை தட்டும் அதிகாரிகள்.. களமிறங்கிய தமிழக அரசின் படை.. சபாஷ் முடிவு!
சென்னை: தமிழ்நாடு முழுக்க 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகளை எழுதி முடித்த மாணவ, மாணவியர் தங்களின் எதிர்கால படிப்பிற்கான முயற்சிகளை எடுக்கிறார்களா? அடுத்த கட்ட திட்டங்களை மேற்கொள்கிறார்களா? என்று தமிழ்நாடு அரசு சார்பாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை பெரும்பாக்கத்தில் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கல்லூரிப் படிப்பிற்கு உதவும் வகையில், வீடு வீடாகச் சென்று தகவல்களை சேகரிக்கும் பணிகளை தாம்பரம் மாநகர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை கல்லூரிக்கு விண்ணப்பிக்காத மாணவர்களை வலியுறுத்தி விண்ணப்பிக்க வைத்தும், விண்ணப்பித்த மாணவர்கள் எந்தக் கல்லூரியில் சேர விரும்புகிறார்களோ அந்தக் கல்லூரியில் காவல்துறை சார்பில் ஒரு சீட் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
இதேபோல் தமிழ்நாடு முழுக்க 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகளை எழுதி முடித்த மாணவ, மாணவியர் சோதனை செய்யப்பட்டு வருகின்றனர். மாவட்ட கல்வி அலுவலர்கள், ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி அலுவலகம் சார்பாக இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரிசல்ட் நம்பிக்கை
சமீபத்தில் வெளியான 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சத்தமின்றி பெரிய புரட்சி ஒன்று நடந்து உள்ளது. கல்வி என்று வந்துவிட்டாலே தமிழ்நாட்டை அடித்துக்கொள்ள முடியாது என்பதற்கு சான்றாக இந்த சம்பவம் நடந்து உள்ளது.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. இதற்கான முடிவுகள் கடந்த 8ம் தேதி வெளியானது. இந்த முறை தேர்வு எழுதியவர்கள் 7.92 லட்சம் பேர் . இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 7.53 லட்சம் பேர்.. மாணவியர்கள் 4.54 லட்சம் மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் . மாணவர்கள் 3.57 லட்சம் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
மாணவிகள் தேர்ச்சி விகிதம் - 96.70% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் - 93.16% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 3.54 சதவிகிதம் மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சத்தமின்றி புரட்சி
தமிழ்நாட்டில் +2 பொதுத் தேர்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 96%-ஐ எட்டி புதிய சாதனை படைத்துள்ளது.
தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 96%-ஐ எட்டி புதிய சாதனை படைத்துள்ளது - தமிழ்நாடு அரசு
2021-22 கல்வியாண்டில் ஆண்டில் 84% ஆக இருந்த | தேர்ச்சி சதவீதம், 2024-25ல் 96% ஆக உயர்வு. அதேபோல், |10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 2021-22ல், 78% ஆக இருந்த | தேர்ச்சி சதவீதம், 2023-24ல் 92% ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. நாளை வெளியாகும் முடிவுகளில் இது மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு நேரடியாக சென்று மாணவர்களை ஊக்கப்படுத்துவது, மாணவர்களை பள்ளிக்கு கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த தேர்ச்சி விகிதம் புதிய உச்சம் தொட்டுள்ளது.
தேர்ச்சி விவரங்கள்
தேர்வு எழுதியவர்கள் 7.92 லட்சம் பேர்
இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 7.53 லட்சம் பேர்
மாணவியர்கள் 4.54 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் .
மாணவர்கள் 3.57 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
மாணவர்களை விட 3.54 சதவிகிதம் மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் 98.82 சதவிகிதம் பெற்று முதலிடம்
ஈரோடு மாவட்டம் 97.98 சதவிகிதம் பெற்று இரண்டாம் இடம்
திருப்பூர் மாவட்டம் 97.53 சதவிகிதம் பெற்று மூன்றாம் இடம்
கோவை மாவட்டம் 97.48 சதவிகிதம் பெற்று நான்காம் இடம்
குமரி மாவட்டம் 97.01 சதவிகிதம் பெற்று ஐந்தாம் இடம்
இந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணை தேர்வு நடக்க உள்ளது. தேர்வை 10 ஆயிரம் பேர் எழுதவில்லை. அவர்களுக்கும் துணை தேர்வு நடக்க உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications