Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் ‛இலவச லேப்டாப்’.. 10 லட்சம் மாணவர்களுக்கு தயாரிக்கும் 3 நிறுவனம்.. எப்போது கிடைக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்க அரசு முடிவு செய்தது. இதற்கான டெண்டர் விடுக்கப்பட்டது. டெண்டர் நடைமுறையில் 10 லட்சம் லேப்டாப்புகள் தயாரிக்க 3 நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்த லேப்டாப் மாணவர்களுக்கு எப்போது வழங்கப்படும்? எந்தெந்த நிறுவனங்கள் லேப்டாப் தயாரிக்கும் பணியை பெற்றுள்ளன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் தகுதியுள்ள கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று கடந்த 2025-26 பட்ஜெட்டில் அறிவிப்பு செய்யப்பட்டது. இதற்கான டெண்டர் கோரப்பட்டது.

laptop tamil nadu free laptop

இதற்கான டெண்டரின் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ‛எல்காட்' (Electronics Corporation of Tamil Nadu or ELCOT) நிறுவனம் வெளியிட்டது.

தற்போது டெண்டர் நடைமுறை முடிந்து பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் எல்காட்' நிறுவனம் சார்பில் 3 பன்னாட்டு நிறுவனங்களுக்கு லேப்டாப் தயாரிக்கும் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி டெல், எச்பி, ஏசர் நிறுவனங்கள் இந்த ஆணையை பெற்றுள்ளன. இந்த 3 நிறுவனங்களும் 10 லட்சம் லேப்டாப் தயாரித்து தமிழக அரசிடம் வழங்கும். அதன்பிறகு இந்த லேப்டாப் தமிழகம் முழுவதும் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும்.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. இதனால் அதற்கு முன்பாக லேப்டாப் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் இதுதொடர்பாக அடுத்த வாரம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அந்த ஆலோசனையில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் தேதி இறுதி செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த டெண்டருக்கான ஆவணத்தின்படி பார்த்தால் இந்த இலவச லேப்டாப் 14 அல்லது 15.6 இஞ்ச் அளவிலான டிஸ்பிளேவில் இருக்கும். 8 ஜிபி ரேம், 256 ஜிபி சாலிட் ஸ்டேட் டிரைவர், 128 எம்பி VRAM அல்லது அதற்கு மேற்பட்ட ஒருங்கிணைந்த கிராபிக்ஸ் சப்போர்ட் செய்யும் வகையில் லேப்டாப் உருவாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புராசசர் என்பது குறைந்தபட்சம் 4 கோருடன் Intel i3 or AMD Ryzen3 உள்ளிட்ட புராசசர் அல்லது அதற்கு மேற்பட்டவை பயன்படுத்தி லேப்டாப் தயாரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த இலவச லேப்டாப் என்பது தமிழகத்தில் 38 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது. அதன்படி பார்த்தால் மொத்தம் 4,600 கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இந்த லேப்டாப் கிடைக்கும். அதிகபட்சம் என்றால் கோவை மாவட்டத்தில் 366 கல்லூரிகள் வழியாக மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்பட உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+