வீட்டுக்கடன்.. தமிழக அரசு ஊழியர்கள் + ஆசிரியர்களுக்கு வந்த நிம்மதி தகவல்.. என்னன்னு பாருங்க
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு இன்னொரு முக்கிய செய்தி வந்துள்ளது.. இதுவரை நிலவி வந்த குழப்பமும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், அறிவிப்புகளையும் அறிவித்து, அதை தீவிரமாக செயல்படுத்தியும் வருகிறது தமிழக அரசு.. ஊழியர்கள் மட்டுமின்றி, அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, சில அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

அரசு அதிரடி: அப்படித்தான், நேற்று முன்தினமும் ஒரு அதிரடியை தந்து திக்குமுக்காட வைத்திருந்தது.. அதாவது, அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணம் ரூ.1000ம், பல்தொழில்நுட்ப கல்வி பயில்வதற்கு ரூ.500ம் வழங்கப்பட்டு வந்த நிலையில், அதனை உயர்த்தி முறையே ரூ.1000லிருந்து ரூ.1500ஆகவும், ரூ.500லிருந்து ரூ.750ஆகவும் அரசாணை ஆணையிடப்பட்டது.
அரசாணை: அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி பயிலும் நிலையில் தொழில் முறை கல்வி ரூ.1,500லிருந்து ரூ.2,500, கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரூ.1,500 லிருந்து ரூ.2000, பல்தொழில் நுட்ப கல்லூரி ரூ.750லிருந்து ரூ.1,000 ஆகவும், அரசாணை வெளியிடப்பட்டு முப்பதாண்டுகள் கடந்த நிலையில் அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களது குழந்தைகள் உயர்கல்வி பெறுவதற்கு வழங்கப்பட்டு வந்த கல்வி முன்பணத்தொகை உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.
அதன்படி, அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி பயிலும் நிலையில் முந்தைய வரம்பு தற்போது உயர்த்தப்பட்ட வரம்பு தொழில் முறை கல்வி ரூ.2,500 லிருந்து ரூ.50,000, கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரூ.2,000 லிருந்து ரூ.25,000, பல்தொழில்நுட்ப கல்லூரி ரூ.1,000 லிருந்து ரூ.25,000 தற்போது உயர்த்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அரசு ஊழியர்களுக்காக இன்னொரு செய்தியும் வெளிவந்துள்ளது.. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீட்டுக்கடனிற்கான அசல் மற்றும் வட்டி தொகையை காட்டி வருமான வரி விலக்கு பெறலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வருமான வரி: இதற்கு காரணம், வருமானவரியை தாக்கல் செய்ய தொடர் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.. இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தகுந்த அனுமதி பெறாமல் வீட்டுக் கடன் வாங்கிய நேர்வில் இப்போது வரையிலும் செலுத்தி வரும் வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி தொகையை காட்டி மட்டுமே நேரடியாக வருமான வரி விலக்கு பெற முடியுமா? என்று கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.
இதையடுத்து, இது தொடர்பாக விசாரணையும் நடந்தது. இந்த விசாரணையில், மேற்குறிப்பிட்டபோல, எந்த ஒரு உத்தரவும் இப்போது வரையிலும் வெளியிடப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தற்போது வரை செலுத்தி வரும் வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி தொகையை காட்டி வருமான வரி விலக்கு பெறலாம் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி: தமிழக அரசு ஊழியர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது, மிகுந்த மகிழ்ச்சியை ஊழியர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. 25 வருடங்களுக்கு முன்பு, வெறும் ரூ.4 லட்சமாக இருந்த ஊழியர்களுக்கான வீட்டுக் கடன் வரம்பை படிப்படியாக உயர்த்திக்கொண்டே வந்த தமிழக அரசு, ரூ.50 லட்சம் என்று 2023-24-க்கான பட்ஜெட்டில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications