அரசு ஊழியர்களுக்கு வருகிறதா குட்நியூஸ்? உயர்கிறதா சம்பளம்? தளர்கிறதா ஊக்கத்தொகை நிபந்தனை? அடேங்கப்பா
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் முக்கிய கோரிக்கை ஒன்றை வலியுறுத்தியிருப்பதால், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
கடந்த வாரம், மாநில அரசு ஊழியர்களின் கூடுதல் கல்வித்தகுதிக்கு அரசின் சார்பில் ஊக்கத்தொகை வழங்க அறிவிப்பு ஒன்று வெளியாகியிருந்தது.

முதல்வர் ஸ்டாலின்: அதாவது, அரசு ஊழியர்கள் தங்களது பணிக்காலத்தில் பெற்றிடும் கூடுதல்ஒ கடந்தாண்டு ரத்து செய்யப்பட்டது.. இப்படிப்பட்ட சூழலில், ஊக்க ஊதிய உயர்வை வழங்குவது குறித்த அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
"மத்திய அரசால் சமீபத்தில் அறிவித்துள்ள வழிகாட்டு முறைகளின் அடிப்படையில் இந்த ஊக்க ஊதிய உயர்வு அளிக்கப்படும்.. அதன்படி, அரசு ஊழியர்களில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.25,000 ஊக்க ஊதியத் தொகையும், பட்ட மேற்படிப்பு அல்லது அதற்கு சமமான படிப்பு படித்தோருக்கு ரூ.20 ஆயிரமும், பட்டப் படிப்பு அல்லது பட்டயப் படிப்பு படித்திருந்தால் ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்" என்று அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசு ஊழியர்கள்: மேலும், 10.03.2020-க்கு முன்பு பணியில் சேர்ந்து உயர்கல்வி படித்தோருக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டதால், இந்த அறிவிப்பானது, அரசு ஊழியர்களுக்கு பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
காரணம், தமிழக அரசின் ஊழியர்கள் தங்கள் பார்க்கும் பணிக்கான கல்வி தகுதியை விட, பணிக்காலத்தில் உயர் கல்வித்தகுதிகளை படித்து பெறும் பட்சத்தில் 6 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு வந்தது... மேலும் இந்த ஊதிய உயர்வு அவர்களின் பணிக்காலம் முழுவதும் மாத சம்பளத்துடன் வழங்கப்பட்டது. எனினும், கொரோனா காலத்தில் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால், 2020ம் ஆண்டு முதல் இந்த ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டது.
அதற்கு பிறகுதான் கடந்த வாரம், அரசு ஊழியர்களுக்கான உயர்கல்வி ஊக்கத்தொகைக்கான அரசாணையை வெளியிட்டது. ஆனால், இந்த தொகையை பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் மிகவும் சிரம நிலையில் இருப்பதாக, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்..
அறிவிப்பு வருமா: அதேபோல் ஊக்கத்தொகையானது ஒரே ஒருமுறை மட்டும் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதால், கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழக அரசு ஊக்கத்தொகைகளை பெறுவதற்கான நிபந்தனைகளை தளர்த்தி, பணிக்காலம் முழுவதும் ஊதிய உயர்வு வழங்குவதற்கு தமிழக அரசு மறுபடியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதை அரசு உடனடியாக பரிசீலிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications