"வார்த்தைய" விட்ட "தங்கம்".. தமிழக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்.. கோட்டைக்கு போன மேட்டர்
சென்னை: தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் விடுத்துள்ளது.. அத்துடன் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தந்த பேட்டிக்கு, நீண்ட விளக்கம் ஒன்றையும் தந்துள்ளது. என்ன நடந்தது?
2 நாட்களுக்கு முன்பு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டியின்போது,. "தமிழகத்தில் ஓய்வூதிய திட்டங்களில், 30 லட்சத்து 55,857 பேருக்கு, மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலில், 74,073 பேர் இருக்கிறார்கள்.. அவர்களில் தகுதியானவர்களுக்கு, ஓய்வூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியம் உயர்த்தப்படுவதால், வருடத்துக்கு 845.91 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். 18 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களிலும், உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும்..
பழைய ஓய்வூதிய திட்டம்: அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக, ஆந்திராவில் சில முடிவுகள் எடுத்துள்ளனர். மத்திய அரசு குழு ஒன்றையும் அமைத்திருக்கிறது.. இவற்றை எல்லாம் ஆராய்ந்து, தமிழகத்திற்கு பொருத்தமானதை ஆலோசித்து, முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்வோம் என்று கூறியிருந்தார். அமைச்சரின் இந்த பேச்சுக்குதான் அதிருப்திகள் வெடித்து கிளம்பி உள்ளது. இது நடைமுறையில் இல்லாத விஷயம் என்றும் காரணம் சொல்கிறார்கள்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு, மத்திய அரசின் குழுவிற்கும், ஆந்திர மாநில அரசின் முடிவுகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தமிழ்நாடு தலைமை செயலக சங்க நிர்வாகிகள் அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். இதையடுத்து, பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த முடிவு, மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் தென்னரசு: இதுகுறித்து தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் வெங்கடேசன், செயலாளர் ஹரிசங்கர் ஆகியோர் கூட்டாக ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளனர். அதில், கடந்த 22ம் தேதி நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து பதில் அளித்தார்.
அப்போது, "ஏற்கனவே ஒன்றிய அரசு சோமநாதன் தலைமையில் ஒரு கமிட்டியை போட்டியிருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் சில முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். தமிழ்நாடு இவற்றை எல்லாம் கூர்ந்தாய்வு செய்யக்கூடிய நிலைமையில் இருக்கிறது. இவற்றையெல்லாம் ஆய்வு செய்து, எது நமக்கு பொருத்தமாக இருக்கும் என்பதையெல்லாம் கலந்தாலோசித்து, அதை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பேசிதான் முடிவு சொல்ல முடியும்" என்று கூறியுள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, ஊழியர்களிடம் இருந்து பெறப்பட்ட தொகையும், அரசின் பங்குத்தொகையும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.
தமிழக அரசு தற்போது வரை, ஓய்வூதிய நிதிஒழுங்கு முறைக் குழுமத்துடன் எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. மாநில உரிமைகளில் மத்திய அரசோ, அண்டை மாநிலமோ தலையிட முடியாது. நிதியமைச்சர் கருத்து எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளது
தெளிவுபடுத்துங்கள்: எனவே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை தான் பொறுப்பேற்ற நாள் முதல் கனிவுடன் கேட்டறிந்து அதற்கு தீர்வும் கண்டுவரும் நிதி அமைச்சர், மேற்சொன்ன அம்சங்களை கூர்ந்தாய்வு செய்து, தேர்தல் கால வாக்குறுதியான மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு, ஒன்றிய அரசின் குழுவிற்கும், ஆந்திர மாநில அரசின் முடிவுகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications