வாயை மூடி பேசவும்! அமைச்சர்களுடன் முக்கிய மீட்டிங்! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு!
சென்னை: தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் நீண்டகால கோரிக்கைகள் தொடர்பாக, இன்று அமைச்சர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அந்தச் சங்கங்களிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது. குறிப்பாக, அரசின் அணுகுமுறை மற்றும் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் காரணமாக, பல சங்க நிர்வாகிகள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளதாக கூறுகின்றனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் காலத்தில், திமுக தரப்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும், அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும், ஆசிரியர்களுக்கு உரிய ஊதிய உயர்வு வழங்கப்படும், பணிப்பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்பன போன்ற வாக்குறுதிகள் முக்கியமானவையாக இருந்தன.
இந்த வாக்குறுதிகளை நம்பியே, பல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் திமுகவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தன. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து தற்போது ஐந்து ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அந்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள்
பழைய ஓய்வூதியம், ஊதிய முரண்பாடுகள், பதவி உயர்வு தாமதம், காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலை உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்ந்து நீடித்து வருவதாக சங்கங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் அமைச்சர்கள் வேலு, தங்கம் தென்னரசு மற்றும் மகேஷ் ஆகியோர் இடம்பெற்ற குழு, அரசு ஊழியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அந்தச் சந்திப்பில் சங்கங்கள் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அமைச்சர்களிடம் வழங்கின. அப்போது, உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக சங்கங்கள் கூறுகின்றன.
திமுக வாக்குறுதிகள்
ஆனால், அந்த மனுக்களின் அடிப்படையில் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும், அதனால் ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய, தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் மூன்று அதிகாரிகள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழு அரசிடம் இடைக்கால அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், அந்த அறிக்கையின் அடிப்படையில் கூட எந்த முடிவும் அறிவிக்கப்படாதது அரசு ஊழியர்களிடையே மேலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு ஊழியர்கள்
வரவிருக்கும் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்ட மனநிலை தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இன்று மீண்டும் அமைச்சர்கள் குழுவினர் தலைமைச் செயலகத்தில் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்தச் சந்திப்பின் போது, கோரிக்கை மனுக்களை அளிப்பதோடு, கோஷங்கள் எழுப்பவும், நிகழ்ச்சி அரங்கில் அல்லது அதன் வெளியே தர்ணா உள்ளிட்ட அமைதிப் போராட்டங்களில் ஈடுபடவும் பல சங்கங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
இந்த நிலைமைக்கு முன்னதாகவே, அரசு தரப்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய ஊரக வளர்ச்சித் துறையை சேர்ந்த சில சங்க நிர்வாகிகள்," பேச்சுவார்த்தைக்கு வரும் சங்க நிர்வாகிகள் சப்தமில்லாமல் வந்து மனு அளித்து விட்டு செல்ல வேண்டும், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களுக்கு பேட்டி வழங்கக் கூடாது, நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வெளியே தர்ணா அல்லது வேறு எந்தப் போராட்டங்களிலும் ஈடுபடக் கூடாது" என வாய்மொழி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினர்..
சங்க நிர்வாகிகள்
மேலும், எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கருப்பு உடை, கருப்பு பேட்ஜ் போன்றவற்றை அணிந்து வரவும் அனுமதி இல்லை என்றும், இந்த உத்தரவுகளை மீறி செயல்படும் சங்க நிர்வாகிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள், ஜனநாயக முறையில் தங்களின் கோரிக்கைகளை வெளிப்படுத்தும் உரிமையை பறிக்கும் செயலாகும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
-
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!












Click it and Unblock the Notifications