Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. இவ்வளவு சம்பளமா? அகவிலைப்படி 4% உயர்வு.. வெளியாகும் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 4% ஆக இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.. நாளை ஜூலை மாதம் துவங்க உள்ள நிலையில், மிகுந்த ஆர்வத்துடன், தமிழக அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வை எதிர்நோக்கி உள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுவதை போலவே, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்...

ஆனால், கடும் நெருக்கடி, கடன் சுமை மற்றும் கொரோனாவினால் ஏற்பட்ட வருவாய் இழப்பு போன்ற காரணத்தினால் தமிழக அரசு ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் அகவிலைப்படி உயர்வினை வழங்கப்படாமலேயே இருக்கிறது. எனவேதான், தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.. அதன்படியே, 38 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அறிவிப்பு வந்தது: இது தொடர்பாக தமிழக அரசும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.. இதையடுத்து, அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தில் அகவிலைப்படி ரூ.10,710 உயர வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Tamil nadu government employees salary hike and DA hike for tn government staffs

கூடுதல் உயர்வு: மேலும், இப்போதைய அறிவிப்பின்படி 4% அகவிலைப்படி உயர்வால், அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் மாதம் ரூ.25,500 என்றால், ஊழியரின் அகவிலைப்படி 10,710 ஆக உயரக்கூடும்.. அதாவது, ஊழியருக்கு ரூ.1,020 கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டது. இதனிடையே, தமிழக அரசு ஊழியர்களுக்கு மறுபடியும் அகவிலைப்படி உயரும் என்ற தகவல் வட்டமடித்தது.

அதாவது, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 4% அகவிலைப்படியானது, 2023 ஏப்ரல் 1ம் தேதி கணக்கிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.. ஜனவரி மாதம் உயர்த்த வேண்டிய அகவிலைப்படியை, காலதாமதமாக, அதாவது மே மாதம் உயர்த்தி அறிவித்திருந்தது.. இதனால் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி எப்போது கிடைக்கும்? என்ற கேள்வியும் அன்றே எழுந்தது..

எகிறும் எதிர்பார்ப்பு: இன்றுடன் ஜுன் மாதம் முடிவடையும் நிலையில், ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை மாதத்தில் தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று சொல்லப்படும் நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில், தமிழக அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மாதம் ரூ.25,500 என்றால், ஊழியரின் அகவிலைப்படி ரூ.10,710 ஆக உயரும் என தெரிகிறது.. அந்தவகையில், அரசு ஊழியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்கள்: அதுபோலவே, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+