டாஸ்மாக் கடைகளில் QR Code முறையில் மது விற்பனை! ஹைகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்
சென்னை: டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பதை தடுக்கும் வகையில், வரும் மார்ச் மாதம் முதல் கியூ ஆர் கோடு முறையில் மது விற்பனை அமல்படுத்தப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என கடந்த 2024 ம் ஆண்டு அக்டோபர் மாதம் டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை பிறப்பித்தது.

Image : AI Created
இதை எதிர்த்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கை நீதிபதி பரத சக்கரவர்த்தி விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில், தனிப்பட்ட ஊழியர்கள் செய்யும் தவறுக்கு அனைத்து ஊழியர்களையும் பணியிடை நீக்கம் செய்வது என்பது சட்ட விரோதமானது என வாதிடப்பட்டது.
அரசுத்தரப்பிலும், இடையீட்டு மனுதாரர் தரப்பிலும், ஊழியர்கள் கூட்டு சேர்ந்து அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்து விட்டு, கூடுதல் தொகையை தங்களுக்குள் பங்கிட்டு கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும். அரசு தரப்பில், டாஸ்மாக் மதுபான கடையில் மதுபான விற்பனை, வரும் மார்ச் முதல் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளதாகவும், அதன் பிறகு நுகர்வோர்கள் வாங்கும் ஒவ்வொரு பாட்டிலும் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்யப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட விலை மட்டுமே வசூலிக்கப்படும் எனவும், அதன்பின் கூடுதல் தொகை வசூக்கப்படுவதாக புகார் ஏதும் எழாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் இந்த வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி, டாஸ்மாக் கடையில் கூடுதல் தொகை வசூலிக்கும் விவகாரத்தில் அனைத்து ஊழியர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதற்கு முகாந்திரம் இருந்தால் மட்டுமே அனைத்து ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி, டாஸ்மாக் நிறுவாகத்தின் சுற்றறிக்கையை உறுதி செய்து, வழக்கை முடித்து வைத்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications