அரசு விரைவு பேருந்து.. தஞ்சாவூர், சேலம், மதுரைக்கு மகிழ்ச்சி.. இனிமேல் இந்த 22 இடங்களிலும் அதிரடிதான்
சென்னை: அரசு போக்குவரத்து கழகம் முக்கிய அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. அதன்படி, விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 22 பணிமனைகளிலும் இந்த அதிரடியை செயல்படுத்த போவதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அத்தியாவசிய போக்குவரத்து சேவைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக குறைந்த கட்டணத்தில் அரசு வழங்கி வருகிறது.

மேலும், அனைத்து கிராம பகுதிகளுக்கும் பஸ் பயண வசதியை ஏற்படுத்தி, தமிழகம் முழுவதும் தடையற்ற போக்குவரத்து சேவையையும் அளித்து வருகிறது.
பயணச்சலுகை: அத்துடன், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு இலவச பஸ் பயணச்சலுகை, சாதாரண நகர கட்டண பஸ்களில், "மகளிர் கட்டணமில்லா பயணம்" திட்டம், பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய பேருந்து வழித்தடங்களை தொடங்கி வைத்தல், பழைய பேருந்துகளை புதுப்பித்தல், புதிய பஸ்கள் கொள்முதல் செய்தல், பேருந்து பணிமனைகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களையும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
பணிமனைகள்: எனினும், அரசு போக்குவரத்து கழகத்துக்கான வருவாய் அதிகரிப்பு அவசியமானதாக உள்ளது.. அதற்காக, டிக்கெட் விலையை ஏற்றி மக்களின் தலையில் பாரத்தை சுமத்தவும் அரசு விரும்பவில்லை.
அதனால்தான், மாற்று வழியை கையில் எடுத்துள்ளது. அதன்படி, அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 22 பணிமனைகளில் பார்சல் புக்கிங் அலுவலகங்கள் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது... அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் கொண்டு செல்லும் திட்டமானது, கடந்த வருடமே துவக்கப்பட்டதுதான்.
ஆனால், 1000-க்கும் மேற்பட்ட அரசு விரைவு பஸ்களில், இந்த திட்டத்தின் மூலம் பொருட்களை அனுப்ப முக்கிய பேருந்து நிலையங்களில் மட்டுமே புக்கிங் ஆபிஸ் வசதி உள்ளதே தவிர, பிற இடங்களில் திறக்கப்படவில்லை. எனவே, இந்த திட்டத்தை விரிவு படுத்தும் வகையில் போக்குவரத்து பணிமனைகளிலும் பார்சல் புக்கிங் அலுவலகங்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜரூர் பணிகள்: அந்தவகையில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான 22 பணிமனைகளில் பார்சல் புக்கிங் செய்யும் அலுவலகங்களை திறப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்ல, சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, புதுச்சேரி, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பணிமனைகளில், இடம் தேர்வு செய்யும் பணியும் நடந்து வருவதாக போக்குவரத்து அதிகாரிகள் கூறுகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications