2 நாளில்.. அடுத்தடுத்து வந்த 2 தங்கமான நியூஸ்.. தமிழக அரசு அதிரடி.. பல ஆயிரம் பேருக்கு சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு நேற்றும் இன்றும் அடுத்தடுத்து இரண்டு முக்கியமான செய்திகளை வெளியிட்டு உள்ளது. வேலைவாய்ப்பு தொடர்பாக அடுத்தடுத்து குட் நியூஸ்களை வெளியிட்டு உள்ளது.

முதல் கட்டமாக தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துனர் பணியிடம் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

bonus dearness allowance

பல வருடங்களாக போக்குவரத்து துறையில் அரசு பணிகளை நிரப்ப வேண்டும் என்பது கோரிக்கையாக வைக்கப்பட்டு வந்தது. பல பொறுப்புகள் காலியாக இருந்ததாக இந்த கோரிக்கை வைக்கப்பட்டது. நேற்று இது தொடர்பாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய முடியும்.

இரண்டாவதாக அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-IIன் கீழ், 2025-26ம் ஆண்டில் 2,329 ஊராட்சிகளில் பல்வேறு பணிகள் நிரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 1,087 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை இதற்காக வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த மார்ச் 14ம் தேதி தமிழக பட்ஜெட்டில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அறிவிக்கப்பட்ட 5 நாளில் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

அடுத்த அறிவிப்பு என்ன

இரண்டு முக்கிய அறிவிப்புகள் வந்த நிலையில் அடுத்து அகவிலைப்படி அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2% அகவிலைப்படி மாநில அரசு பணியாளர்களுக்கு உயர்த்தப்படலாம். ஏற்கனவே மத்திய அரசும் இதே திட்டத்தில் உள்ளது.

ஜனவரி - ஜூன் 2025 இடையிலான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலை நிவாரணம் (டிஆர்) 2% உயர்த்தப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இதன் மூலம் நாடு முழுக்க பல கோடி ஊழியர்களின் சம்பளம் உயரப்போகிறது. ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும் என்று இங்கே பார்க்கலாம்.

ஜூலை-டிசம்பர் 2024 காலத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI) தரவுகளின் அடிப்படையில், DA உயர்வு 2% ஆக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 2018க்குப் பிறகு இது மிகக் குறைவான அகவிலைப்படி உயர்வு ஆகும். 2% உயர்வு என்பது நிலை 1 அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் ரூ. 360 ஆக இருக்கும். அதாவது ரூ.360 சம்பளத்தில் உயரும்.

7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் (நிலை 1) ரூ.18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இவர்களுக்கு 360 ரூபாய் அகவிலைப்படி உயர்வு இருக்கும். ஜூலை-டிசம்பர் 2024 அகவிலைப்படி 3% அதிகரித்து 53% ஆக உயர்த்தப்பட்டது. தற்போது இதில் மேலும் 2% உயர்த்தப்பட்டு 55% ஆக அதிகரிக்கப்பட உள்ளது.

அகவிலைப்படி உயர்வு

இதன் மூலம் 1 கோடிக்கும் அதிகமான பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். அகவிலைப்படி உயர்வால் நாடு முழுவதும் உள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். DA மற்றும் DR இன் அதிகரிப்பு, ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு அதிகரிக்கும் செலவுகளைச் சமாளிக்க உதவும்.

அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்த முடிவால் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.9,448 கோடி செலவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+