தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக மேலும் ரூ.41 கோடி நிதி ஒதுக்கீடு.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக மேலும் ரூ.41 கோடியை தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறைந்து ஆறுதல் அளித்து வருகிறது. ஆனால் இன்னும் கட்டுக்குள் வரவில்லை

Tamil Nadu government has allocated another Rs.41 crore for corona prevention work in the state

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் 31-ம் தேதி வரை போடப்பட்டுள்ள தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பணிகளை மேற்கொள்ள அரசுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டது.இதனை தொடர்ந்து அரசியல், சினிமா, விளையாட்டு என பல்வேறு பிரபலங்களும், பொதுமக்களும் அரசுக்கு நிதி உதவி செய்து வருகின்றனர். இவ்வாறு வந்து குவியும் கொரோனா நிதியை தமிழக அரசு வெளிப்படையாக அறிவித்து வருகிறது.

தமிழகத்துக்கு தேவையான மருந்துகள்- ஆக்சிஜனுக்காக முதல் கட்டமாக ரூ.50 கோடியை தமிழக அரசு ஏற்கனவே ஒதுக்கி இருந்தது. அடுத்த கட்டமாக RTPCR கிட்கள் வாங்கிட ரூ.50 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது.

இந்த நிலையில் ஆக்சிஜன் உருளைகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவ கருவிகள் வாங்குவதற்கு மேலும் 41.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுவரை கொரோனா நிதிக்காக 186.15 கோடி ரூபாய் வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+