தமிழகத்தில் எண்ணெய், இரும்பு, சிமெண்ட், சர்க்கரை உள்பட சில தொழிற்சாலைகள் இயங்க அரசு அனுமதி
சென்னை: தமிழகத்தில் குறைந்த அளவு பணியாளர்களுடன் எண்ணெய், இரும்பு, சிமெண்ட், டயர் உள்ளிட்ட சில தொழிற்சாலைகள் நிபந்தனைகளுடன் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. நேற்று தொழில் அதிபர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்திய பின்னர் தமிழக அரசு தொழிற்சாலைகள் இயங்குவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
Recommended Video
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி ஊரடங்கு முடிந்த நிலையில் மீண்டும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மே 3ம் தேதி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் , சுற்றுலா தொழில் என அனைத்தும் முடங்கி உள்ளது. சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக தொழில்கள் முடங்கியுள்ளதால் தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர்கள், ஏழைகள், கூலி தொழிலாளர்கள் என அனைவரும் கவலை அடைந்துள்ளனர்.

மக்கள் முடக்கம்
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் காரணமாக மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வுகள் எதுவும் தமிழகத்தில் அமல்படுத்தப்படவில்லை. மே 3ம் தேதி வரை ஊரடங்கில் எந்த தளர்வும் அளிக்கப்படாது என்று அண்மையில் தமிழக அரசு அறிவித்தது. இதனால் மே 3 வரை தொழில்கள் செயல்பட முடியாத நிலை உள்ளது.

தொழில் அதிபர்களுடன்
இந்நிலையில் தமிழகத்தில் சில தொழிற்சாலைகளை படிப்படியாக இயங்க அனுமதிப்பது தொடர்பாக தொழில் அதிபர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீடியோ கான்பிரன்சிங் முறையில் நேற்று காலை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் டிவிஎஸ் குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன், டிவிஎஸ் அன்ட் சன்ஸ் நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குனர் தினேஷ், ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் வெங்கடராமன், தோல் ஏற்றுமதி குழுமத்தின் தலைவர் அகீல் அகமது, அகில இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் ஹரி தியாகராஜன், இந்திய சிமென்ட் நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன் உள்பட சில தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

தொழில்கள் இயங்க அனுமதி
தொழில் அதிபர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் குறித்து எடுத்துரைத்தனர். இதையடுத்து ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அரசாணையை தமிழக தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டார். அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையொட்டி அனைத்து நிறுவனங்களும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் பொருட்கள் விற்பனை மட்டும் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உற்பத்தி பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

சிமென்ட் ஆலைகள்
அதை ஏற்று எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், பெரிய இரும்பு ஆலைகள், சிமெண்ட் உற்பத்தி ஆலைகள், சர்க்கரை உற்பத்தி, பெயிண்ட், உரத்தொழிற்சாலை, கண்ணாடி, டயர் உற்பத்தி ஆலைகள், பேப்பர் மில், கனரக வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஆகிய தொழிற்சாலைகளுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளிக்கப்படுகிறது. இந்த நிறுவனங்கள் குறைந்த அளவு பணியாளர்களை கொண்டு பராமரிப்பு பணிகளை மிகவும் பாதுகாப்பாகவும், கவனமாகவும் சமூக இடைவெளியை கடைபிடித்து செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலைகள் எல்லாம் இன்னும் ஓரிரு நாட்களில் செயல்பட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications