சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞராக ஜி.தேவராஜன் நியமனம்.. தமிழ்நாடு அரசு உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞராக ஜி.தேவராஜனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திமுக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. திமுக ஆட்சியில் அமர்ந்தவுடன் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றனர்.

Tamil Nadu government has appointed G. Thevarajan as the Chennai Municipal Criminal Attorney

இதேபோல் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் பதவி விலகினர். நிரந்தரமாக அரசு வழக்கறிஞர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளை தமிழ்நாடு அரசு துவங்கியுள்ளது. இந்த நிலையில் தற்காலிக அடிப்படையில் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த அடிப்படையில், சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞராக பதவி வகித்து வந்த ஜெய்சங்கர், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதில் ஜி.தேவராஜன், தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+