சென்னைக்கு விடிவுகாலம் வந்துவிட்டது.. சுத்தமாகிறது கூவம், அடையாறு ஆறு.. உருவானது புதிய அரசு நிறுவனம்
சென்னை: சென்னையில் உள்ள ஆறுகளை சுத்தம் செய்யும் பொருட்டு சென்னையில் நதிகளை மொத்தமாக மாற்றும் நிறுவனம் எனப்படும் Chennai Rivers Transformation Company என்ற புதிய நிறுவனத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது
கடந்த தமிழ்நாடு பட்ஜெட்டில் சென்னையில் இருக்கும் முக்கியமான ஆறுகளை சுத்தம் செய்வது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அடையாறு ஆற்றில் 44 கி.மீ தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை கண்ணகி நகர், நாவலூர், பெரும்பாக்கம், அத்திப்பட்டு பகுதியில் ₹20 கோடி செலவில் விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும். அடையாறு ஆற்றில் 44 கி.மீ தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் திட்டம், கரைகளில் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆறுகள் சுத்தம்: அதேபோல் கூவம் ஆற்றிலும் இதே மாற்றங்கள் செய்யப்படும். சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் 1000 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். கூவம், அடையாற்றை சுத்தம் செய்ய பணிகள் தொடங்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள 10 ஆயிரங்கள் குளங்கள், நீர் நிலைகள் தூய்மைப்படுத்தப்படும். அடையாறு , கூவம் பகுதிகளை மறுசீரமைக்க ரூ. 1,500 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
ரூ. 320 கோடியில் வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் செயல்படுத்தப்படும். எழில்மிகு கோவை, மாமதுரை திட்டங்கள் மூலம் 2 நகரங்கள் மேம்படுத்தப்படும். ரூ172 கோடியில் கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் ₹9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
சென்னையில் உள்ள ஆறுகளை சுத்தம் செய்யும் பொருட்டு சென்னையில் நதிகளை மொத்தமாக மாற்றும் நிறுவனம் எனப்படும் Chennai Rivers Transformation Company என்ற புதிய நிறுவனத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது
சமீபத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பதிலின்படி, அடையாறு நதியை மீட்க சென்னை நதிகள் மாற்றும் நிறுவனம் (CRTC) என்ற புதிய நிறுவனத்தை அரசு உருவாக்கலாம். முன்மொழியப்பட்ட CRTC ஆனது, அடையாறு உட்பட நகரின் மூன்று முக்கிய நீர்நிலைகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் 2006 இல் உருவாக்கப்பட்ட சென்னை நதி மறுசீரமைப்பு அறக்கட்டளை (CRRT) அறிவித்த திட்டங்களை செயல்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதை ஏற்று இந்த நிறுவனம் தற்போது உருவாக்கப்பட்டு உள்ளது. மாநில முனிசிபல் நிர்வாகத் துறை ஆற்றை மீட்டெடுப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை (DFR) தயாரித்து, இதை சரிசெய்ய ஜூலை மாதம் டெண்டர் விடப்பட்டது. மூன்று சர்வதேச நிறுவனங்கள் உட்பட 19 ஏலதாரர்கள் இதற்கு பங்கேற்றனர். சிஆர்டிசிக்கு அரசு ஒப்புதல் அளித்து, பணியாளர்களை நியமித்தவுடன் பணிகள் தொடங்கும்.
அரசு மூலம் உருவாக்கப்படும் இந்த புதிய நிறுவனம், ஆற்றங்கரை பராமரிப்பு, நடைபாதைகள் அமைத்தல், சைக்கிள் டிராக்குகள், வாகன நிறுத்துமிடங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தும். 2018-ல் தொடங்கப்பட்ட அடையாறு நதி மறுசீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பிற மாநில நிறுவனங்கள், 80%க்கும் அதிகமான பணிகளை முடித்துவிட்டதாக தீர்ப்பாயத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 522 டன்களுக்கும் அதிகமான திடக்கழிவுகள் ஆற்றங்கரைகளில் இருந்து அகற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 3 பாலங்களை அழகுபடுத்தும் பணியும், கோட்டூர்புரம், மறைமலைநகர், ஜாபர்கான்பேட்டை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளது. கழிவுநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் குப்பை தொட்டிகள் அமைக்கும் பணியும் நிறைவடைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னையில் உள்ள ஆறுகளை சுத்தம் செய்யும் பொருட்டு சென்னையில் நதிகளை மொத்தமாக மாற்றும் நிறுவனம் எனப்படும் Chennai Rivers Transformation Company என்ற புதிய நிறுவனத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது












Click it and Unblock the Notifications