"டபுள் சிக்ஸர்" தமிழக அரசு.. ஸ்டார் ஹோட்டல் + கிளப்களின் பார் உரிம கட்டணம் உயர்வு.. இடிந்துபோன ஓனர்ஸ்
சென்னை: நட்சத்திர விடுதிகளில் மதுபான விற்பனை உரிமம் பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதைக்கேட்டு, 5 ஸ்டார், 4 ஸ்டார், 3 ஸ்டார், ஹோட்டல்கள் அதிர்ந்து போயுள்ளன.
"எப்.எல்- 2" மதுக்கூடம் நடத்த உரிமம் பெற்ற கிளப்புகளுக்கான, வருட சிறப்பு கட்டணம், சென்னையில் 12 லட்சம் ரூபாயும், இதர பகுதிகளில் 8 லட்சம் ரூபாயும், உரிமக் கட்டணம் 25,000 என்றும் இருந்தது.
விண்ணப்பக் கட்டணம்: அதேபோல, விண்ணப்பக் கட்டணம் 7,500 ரூபாயாக இருந்தது. இந்த கட்டணங்கள்தான் தற்போது உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளன.. சென்னைக்கு 15 லட்சமும், இதர பகுதிகளுக்கு 10 லட்சமும், உரிமக் கட்டணம் 30,000 என்றும், விண்ணப்பக் கட்டணம் 10,000 ரூபாய் என்றும் உயர்த்தப்பட்டுள்ளது.

இத்தனை நாளும், கிளப்புகளுக்கான கூடுதல் சிறப்பு கட்டணமாக 10 சதவீதம் அல்லது குறைந்தபட்சம் 10,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இந்த கட்டணமும் தற்போது உயர்ந்துள்ளது.. அதன்படி, 20 சதவீதம் அல்லது 20,000 ரூபாய் என்று உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுக்கூடங்கள்: ஹோட்டல்களில் உள்ள மதுக்கூடங்களுக்கான உரிமத்திற்கு, விண்ணப்பக் கட்டணம், உரிமக் கட்டணம் போன்றவற்றில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.. ஆனால், கூடுதல் சிறப்பு கட்டணம், 10 சதவீதம் அல்லது குறைந்தபட்சம் 10,000 ரூபாய் என்பது, 20 சதவீதம் அல்லது குறைந்தபட்சம் 20,000 ரூபாய் என்று உயர்த்தப்பட்டுள்ளது..
சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் அனுமதியின் கீழ், உரிமம் பெற்ற மதுக்கூடங்களுக்கு சிறப்பு கட்டணம் 2 லட்சம் ரூபாய், 4 லட்சம் ரூபாயாகவும், உரிமக் கட்டணம் 5,000 ரூபாய், 10,000 ரூபாயாகவும், விண்ணப்பக் கட்டணம், 1,000 ரூபாய் என்பது 2,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, விமான நிலைய உணவகங்களில், மதுபானம் வழங்குவதற்கான உரிமக் கட்டணம், விண்ணப்பக் கட்டணம், பாதுகாப்பு வைப்புத் தொகை, டபுள் மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
கிளப்புகள்: மதுக்கூடங்களுக்கான பாதுகாப்பு வைப்புத்தொகை, 50,000 ரூபாய் என்பது, இப்போது ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.. கிளப்புகளுக்கான வைப்புத் தொகை, 75,000 ரூபாயிலிருந்து, 1.50 லட்சம் லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வை கேட்டு ஓட்டல் ஓனர்கள் அதிர்ந்து போயுள்ளார்கள்.. குறிப்பாக, 5 ஸ்டார் ஹோட்டல்களில் மதுபானம் விற்பதற்காக உரிமம் பெறுவதற்கான கட்டணம் ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சமாக உயர்ந்துள்ளதும், 4 ஸ்டார் ஹோட்டல்களில் மதுபானம் விற்பதற்கான உரிமம் ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ. 15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளம், 3 ஸ்டார் ஹோட்டல்களில் மதுபானம் விற்பதற்கான உரிமம் ரூ. 8 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications