உதயசந்திரன் டூ ககன்தீப் சிங் பேடி.. சட்டென ரத்தான பொறுப்புகள்.. ஏழு ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
சென்னை: தமிழ்நாட்டில் ஏழு ஐஏஏஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிதித்துறை முதன்மை செயலாளர் உதயசந்திரனுக்கு கூடுதலாக தொல்லியல்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்கூறியுள்ளதாவது: தமிழ்நாடு பைபர் நெட் கேமிளிர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கமல் கிஷோர் மாற்றுத்திறனாளிகள் நல மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு ஆட்சியராக நியமிக்கப்பட்ட கமல் கிஷோர் ஐஏஏஸ் இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளது

செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், தூத்துக்குடி கலெக்டராக மாற்றப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு கலெக்டராகவே ராகுல்நாத் ஐஏஏஸ் தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் பால் உற்பத்தி மற்றும் பால்வளத்துறை கமிஷ்னரான சுப்பையன் ஐஏஏஸ் கூட்டுறவு பதிவாளர் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி கலெக்டர் செந்தில் ராஜ், கூட்டுறவு பதிவாளர்துறைக்கு மாற்றப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. செந்தில்ராஜ் ஐஏஎஸ் தூத்துக்குடி கலெக்டராகவே தொடருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் ஐஏஎஸ், தமிழ்நாடு பால்உற்பத்தி கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனராக இடமாற்றம் செய்யப்படுகிறார். முன்னதாக இந்த பொறுப்பில் சுப்பையன் ஐஏஎஸ் இருந்தார். அதேபோல் வினீத் ஐஏஏஸ் மாற்றுதிறனாளிகள் துறைக்கு மாற்றப்பட்ட உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது,.
தமிழக அரசின் நிதிதுறை முதன்மை செயலாளர் உதயசந்திரன் ஐஏஏஸ்க்கு கூடுதலாக தொல்லியத்துறைக்கு ஒதுக்கப்படுகிறது.
மக்கள் நல்வாழ்வுத்துறை துறையின் முதன்மை செயலாளராக உள்ள ககன்தீப் சிங் பேடி ஐஏஏஸ்க்கு கூடுதலாக சிறப்பு திட்டம் அமலாக்கத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த துறையை முன்பு உதயசந்திரன் கூடுதலாக கவனித்து வந்திருந்தார்.
எஸ்.வினீத் ஐஏஏஸ் அயலக பணிக்காக மாறுதல் செய்யப்பட்டுள்ளார்." இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications