47 ஆண்டுகளில் இல்லா மழை.. பாதிப்பிலிருந்து மீள ரூ.12,659 கோடி தேவை! முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிக்ஜாம் புயல் மழை பாதிப்பை எதிர்கொள்ள தற்காலிகமாக ரூ.7,033 கோடியும், நிரந்தரமாக ரூ.12,659 கோடியும் வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை, ஒட்டு மொத்த சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளம் சென்னைக்கு முக்கிய பாடமாக இருந்த போதும், அந்த அனுபவத்தை கொண்டு இந்த புயல் மழையை எதிர்கொள்ள முடியவில்லை. மழை நின்று 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இருப்பினும் எண்ணூர் பகுதிகளில் மழைநீருடன் கச்சா எண்ணெய் கழிவுகளும் சேர்ந்து குடியிருப்புகளை சூழ்ந்ததால் இன்னமும் அப்பகுதி மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

Tamil Nadu government insists on relief of Rs.12,659 crores to recover from cyclone michaung rains

ஒரே நாளில் 40 செ.மீ வரை மழை பெய்ததால்தான் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. சென்னையின் ஆண்டு சராசரி மழை அளவு 100 மிமீ முதல் 1100 மி.மீதான். ஆனால் இதில் மூன்றில் ஒரு பகுதி மழை கடந்த 4ம் தேதி பெய்திருக்கிறது. எனவேதான் வெள்ளம் வடிய அதிக நாட்கள் ஆகியுள்ளன. வெள்ளத்தில் ஏராளமான பொருட்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. சுமார் 4 லட்சம் வாகனங்கள் சேதமடைந்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதில் பெரும்பாலும் பைக்குகளும், ஆட்டோக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் சாமானிய மக்களின் வாழ்வில் கூடுதல் பொருளாதார சுமை ஏறியிருக்கிறது.

டிச.4ம் தேதி தொடங்கி 6ம் தேதி வரை சென்னை முழுவதும் செல்போன் இணைப்புகள் மற்றும் இன்ர்நெட் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. எனவே மீட்பு பணிகளில் கடுமையான தாமதம் ஏற்பட்டது. பின்னர் அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக செல்போன் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்நிலையில், மத்திய அரசின் குழு தமிழகத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வந்தது. இந்நிலையில் இன்று முதலமைச்சரை இக்குழு சந்தித்த நிலையில், புயல் பாதிப்பிலிருந்து மீள உடனடியாக ரூ.7,033 கோடி வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழுவிடம் மனு கொடுத்து வலியுறுத்தியுள்ளார்.

அதாவது மிக்ஜாம் புயல் மழைக்கு தற்காலிக நிவாரணமாக ரூ.7,033 கோடி வேண்டும் எனவும், நிரந்தர நிவாரணத் தொகையாக ரூ.12,659 கோடி தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+