12வது ஃபெயிலா?.. 10வது பாஸ் ஆ?.. அட! எட்டே போதும்.. தமிழக அரசு தரும் செம ஐடியா..
சென்னை: 12 ஆம் வகுப்புத் தேர்வு எழுதவில்லையா நீங்கள்? அல்லது தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாதவரா நீங்கள்? அடுத்து வரப் போகும் தேர்வை எழுதி, நீங்கள் தேர்ச்சி பெறுவதற்குள் ஓர் ஆண்டு வீணாகப் போய்விடும் என்று கவலைப்படுபவரா நீங்கள்? அத்தனைக்கும் ஓர் அற்புதமான தீர்வை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு.
அச்சத்தை விட்டு, மிச்சம் உள்ள காலத்தைப் பயன்படுத்தி எப்படி முன்னேறலாம் என வழிகாட்டுவதற்கு, பள்ளிக்கல்வி சார்பாக ஆலோசனை முகாம் நடைபெற்று வருகிறது. அது பற்றி உங்களுக்குத் தெரியுமா?

12 ஆம் வகுப்பு படித்து முடித்தால்தான் அடுத்த உயர்படிப்பு போகமுடியும் என்பதில்லை. இப்போது முடித்துள்ள கல்வித்தகுதியை வைத்தே பாலிடெக்னிக் போன்ற தொழிற்படிப்பைப் படித்து முன்னேறப் பல வழிகளை ஏற்படுத்தித் தருவதற்காகத்தான் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதை முதலில் மாணவர்களாகிய நீங்கள் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். இதற்காகவே செயல்பட்டு வருகிறது Career Guidance Cell. அதாவது தொழிற் படிப்புகளுக்கான வழிகாட்டி மையம்.
தனது பத்தாம் வகுப்பு படிப்புக்குப் பிறகு பாலிடெக்னிக் படிப்பை மேற்கொண்டவர்தான் ஹேம ரூபா. அவர் 12 ஆம் வகுப்புக்குப் போகவில்லை. தனக்கு ஏதேனும் ஒரு தொழிற்கல்வி தெரிந்திருந்தால் போதும், அதைக் கொண்டு ஒரு வேலைவாய்ப்பைப் பெற்றுவிடலாம் எனத் திட்டமிட்டார். அரசு வழங்கிய ஆலோசனையை ஏற்றுத் தொழிற்கல்வியில் சேர்ந்தார். இப்போது இவர் தரமணியில் செயல்பட்டு வரும் மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.

அடுத்த பொன் ஜோதி. இவரும் அதே பாலிடெக்னிக் மாணவிதான். அவர் என்ன சொல்கிறார்? "எங்கள் கல்லூரியில் அட்வான்ஸ் லேப் வசதிகள் இருக்கின்றன. அதைக் கொண்டு நாங்கள் நேரடியான அனுபவத்தைப் பெற்று வருகிறோம். படிப்பதை உடனுக்குடன் செயல்முறை வடிவில் செய்து பார்ப்பதால், நல்ல அனுபவம் கிடைக்கிறது.
ஆகவே, எதையும் முழுமையாகக் கற்றுக்கொண்ட திருப்தி ஏற்படுகிறது. அதே மாதிரி படித்து முடித்தவுடன் நேரடியாக வேலைவாய்ப்புக்கும் உத்தரவாதம் இருக்கிறது. ப்ளேஸ்மென்ட்டை கல்லூரி நிர்வாகமே உருவாக்கிக் கொடுக்கிறது" என்கிறார்.

இவர்களைப் போன்ற பெண்கள் தொழிற்படிப்பிலும் ஆர்வம் காட்டிப் படிப்பதைப் பார்க்கும் போது உற்சாகம் வருகிறது.
இதே மத்திய பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர்தான் யாஷ் அகமத். அவர் என்ன சொல்கிறார்? "தினமும் திருவொற்றியூரிலிருந்துதான் தரமணிக்கு வந்து போகிறேன். பயணம் பற்றி எந்தப் பிரச்சினையும் இல்லை. தமிழக அரசின் இலவச பஸ் பாஸ் இருக்கிறது. ஆகவே, எந்தப் பொருளாதார நெருக்கடியும் இல்லாமல் வந்து படிக்க முடிகிறது. அத்துடன் கல்லூரியில் ஊக்கத்தொகையும் கிடைக்கிறது" என்கிறார்.

இவரைப் போன்று இங்குப் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் அரசு ஊக்கத்தொகை தருகிறது. இலவசமாகவே பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளைத் தருகிறது. எனவே இந்தக் கல்லூரியில் படிப்பைத் தொடங்கும் ஒருவர், இறுதிவரை எந்த நெருக்கடியும் இல்லாமல் கல்லூரி படிப்பை முடித்து தரமான வேலையையும் பெற்று வெளியேறலாம் என்கிறார்கள் அரசு தரப்பில் ஆலோசனை வழங்கும் வல்லுநர்கள்.
தொடர்ந்து பேசிய மூவரும் 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்கள். வெங்கடேஷ் என்ற மாணவர் 12 ஆம் வகுப்புக்குப் பிறகு இந்த பாலிடெக்னிக் கல்லூரியைத் தேர்வு செய்தவர். இவரது அனுபவம் என்ன? அவரே சொல்கிறார்.

"நான் +2 முடித்துவிட்டு வந்ததால், நேரடியாக 2 ஆண்டு வகுப்பில் சேர்ந்தேன். 10 ஆம் வகுப்பு படித்து வந்தால் 3 ஆண்டுகள் வரை தொழிற்கல்வி கற்க வேண்டும். 12 ஆம் வகுப்பு முடித்து வந்தால் 2 ஆண்டுகள் வரைதான் படிக்க வேண்டி இருக்கும். நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கிறேன்.
இங்கே 'ட்ரிபிள் இ' இருக்கிறது. 'இசி' இருக்கிறது. மெக்கானிக்கல், ஃபிஷரிங் எனப் பல படிப்புகள் இருக்கின்றன. இந்தப் படிப்பை முடித்தால் நல்ல எம் என் சி கம்பெனியில் நல்ல வேலைக்குப் போகலாம். அதற்காகத்தான் இந்தக் கல்லூரியைத் தேர்வு செய்தேன்.

என்னைப் போலவே நீங்களும் இந்தக் கல்லூரியைத் தைரியமாகத் தேர்வு செய்யலாம். அதிகம் செலவு செய்து பொறியியல் படிப்பு படிக்க முடியவில்லை என வருத்தப்படத் தேவையில்லை. அதற்கு இணையான இந்தப் படிப்புகளை நீங்கள் தேர்வு செய்யலாம்" என்கிறார்
தொழிற்கல்வி சார்ந்த படிப்புகள் குறித்து மத்திய பாலிடெக்னிக் கல்லூரியின் சீனியர் டெக்னிகல் ஆஃபீசர் பழனியாண்டி, "தொழிற்கல்லூரியில் படிக்க அதிக பட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதுமானது. ஒருவேளை ஒருவர் 12 ஆம் வகிப்பில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும், பாலிடெக்னிக்கில் சேரலாம்.

பத்தாம் வகுப்பும் தேர்ச்சி பெறவில்லையா? எட்டாம் வகுப்புதான் படித்து இருக்கிறீர்களா? அப்படி என்றால் நீங்கள் ஐடிஐ படிப்பில் சேர்ந்து உங்கள் படிப்பை மேற்கொள்ளலாம். ஆகவே, தேர்ச்சி பெறாத வகுப்பைப் பற்றி யோசித்து காலத்தை வீணாக்காமல், பாலிடெக்னிக் படிப்புகளும் வாழ்க்கைக்கான வெற்றிப் படிக்கட்டுகள்தான் என்பதை மாணவர்களாகிய நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு ஏற்படுத்தித் தரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றிபெற உங்களை அன்புடன் அழைக்கிறோம்" என்கிறார் இவர்
அப்புறம் என்ன புறப்படலாமா? இன்று நீங்கள் எடுக்கும் முடிவுதான் வருங்காலத்தில் நீங்கள் பெறப் போகின்ற எம்.என்.சி கம்பெனி வேலைக்கான முதற் படிக்கட்டு மக்களே!




-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications