Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் பொங்கல் பரிசாக ரேஷனில் ரூ.1000? தரப்படுமா.. தரப்படாதா? கோட்டையில் என்ன நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.1000 வழங்க அரசு திட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

தமிழ்நாட்டில் எல்லா வருடமும் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படும். கடந்த 2022ம் வருடம் மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. 2023 வருடம் இதையடுத்து பரிசு பொருட்களில் மாற்றம் செய்யப்பட்டது. பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசு பொருட்கள் இந்த வருடம் வழங்கப்பட்டது.

Tamil Nadu government is still discussing about Rs. 1000 to people as the Pongal Gift in Ration Shops

அதோடு வழங்கப்படாத மற்ற பொருட்களுக்காக 1000 ரூபாய் பணம் வழங்கப்பட்டது. கரும்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கரும்பு விநியோகம் செய்யப்படவில்லை என்று முதலில் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக அரசியலாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மாற்றம்: முக்கியமாக அதிமுக சார்பாக இதற்கு எதிராக போராட்டமும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தமிழ்நாடு அரசு துரிதமாக செயல்பட்டு கரும்புகளை கொள்முதல் செய்து மக்களுக்கு கொடுப்போம் என்று அறிவித்தது. கரும்புடன் சேர்த்து 1000 ரூபாய் பணம் வழங்கப்படுவது மக்கள் இடையே வரவேற்பை பெற்றது.

இந்த வருட பரிசு: இதையடுத்து இந்த வருடமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்தது தமிழ்நாடு அரசு. அதன்படி, தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும்.

இதற்காக ரூபாய் 238.92 கோடி செலவிடப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டிற்கான, பொங்கல் பரிசுத் தொகுப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்கிட 31.12.2023 அன்றைய தேதி நிலவரப்படி, 2,19,57,402 எண்ணிக்கையிலான குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிடும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அப்படி செய்யும் பட்சத்தில் தோராயமாக ரூ.238,9272747- (ரூபாய் இருநூற்று முப்பத்து எட்டு கோடியே தொண்ணூற்று இரண்டு இலட்சத்து எழுபத்து இரண்டாயிரத்து எழுநூற்று நாற்பத்து ஒன்று மட்டும்) செலவினம் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மீண்டும் பரிசுத்தொகை: இந்த நிலையில்தான் மீண்டும் 2024ம் வருட பொங்கல்.. அதாவது அடுத்த மாதம் வர உள்ள பொங்கலுக்காக தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.1000 வழங்க அரசு திட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

ஆதார் எண் அடிப்படையில் ஆய்வு செய்த போது மொத்தமுள்ள 2.20 கோடி ரேஷன்கார்டுதாரர்களில் 14.60 லட்சம் பேருக்கு வங்கிக் கணக்குகள் இல்லை என தெரியவந்துள்ளது. இதனால் ரேஷன் கடைகளில் நேரடியாக ரொக்கமாக பணத்தை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இரண்டு 500 ரூபாய் தாள்கள் மூலம் பணத்தை கொடுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

அதிகாரிகள் இது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+