Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குவாரிகளில் விதிமீறல்.. சரி செய்ய புதிய திட்டத்தை அமல்படுத்திய தமிழக அரசு! பிரச்சனை சரியாகுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகள் தமிழக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. இப்படி இருக்கையில் இந்த பிரச்சனையை சரி செய்ய தமிழ்நாடு அரசு புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறது.

குவாரிகளில் நடக்கும் விதி மீறல்கள் பெரிய அளவிலானவை. இவை அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பீடுகளை ஏற்படுத்தக்கூடியவை. அதேபோல, இயற்கை வளம் சுரண்டலும் இந்த விஷயத்தில்தான் நடக்கிறது. எனவே குவாரி முறைகேடுகளை தடுக்க தொடர்ந்து சமூக ஆர்வலர்களும், அரசியல் தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

Tamil Nadu Government

குவாரிகளில் விதிமீறல்கள்

இப்படி இருக்கையில் முறைகேடுகளை தடுக்க தமிழ்நாடு அரசு புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.அலாவுதீன் தலைமையிலான குழு 2023ல் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 'ஒற்றை முறை வரன்முறைப்படுத்தும் திட்டம்' என இதற்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டம் 2015 ஏப்ரல் 6 முதல் பின் தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது என டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது கடந்த 2015 ஏப்ரல் மாதம் முதல் நடந்த அனைத்து விதிமீறல்களும் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். எனவே, விதிமீறல் செய்தவர்கள் தப்பிக்க வாய்ப்பு இல்லை.

புதிய சட்டம்

இந்த திட்டத்தின்படி, விதிமீறலில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். குத்தகை எல்லைக்கு அப்பால் மற்றும் குத்தகை இல்லாத இடங்களில் கற்களை சட்ட விரோதமாக வெட்டி எடுக்கும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். குத்தகை எல்லைக்குள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டால் ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.25 என்கிற அடிப்படை விலையில் 2 மடங்கு அபராதம் விதிக்கப்படும். அதுவே குத்தகை இல்லாத பகுதிகளில் கற்கள் வெட்டப்பட்டால் அதற்கு 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும்.

ட்ரோன் மூலம் ஆய்வு

புதிய விதிமுறைகளின்படி, தற்போது செயல்பட்டுவரும் அனைத்து குவாரி குத்தகைகளுக்கும் ட்ரோன் ஆய்வுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். இதுவரை, மாநிலத்தில் உள்ள 1,845 கரட்டுக்கல் குவாரித் தளங்களில், 904 இடங்களில் ட்ரோன் ஆய்வுகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.

தவறான சட்ம்

இருப்பினும், இத்திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விதிமீறல்களில் ஈடுபட்ட குவாரிகளை மூட வேண்டும் என்றும் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக அறப்போர் இயக்கம், இந்தத் திட்டம் சட்டவிரோதமானது எனக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

குற்றவியல் நடவடிக்கை

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் இது குறித்த கூறுகையில், "சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957, கனிமத்தின் மதிப்பை மீட்டெடுக்கவும், 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் கூடிய குற்றவியல் நடவடிக்கைக்கு வழிவகுக்கிறது.

சுரங்க மாஃபியா

ஆனால் அரசு, வெறும் ₹25/டன் என்ற மலிவான ராயல்டி கட்டணத்தில் இரு மடங்கு அபராதமாகப் பெற்று, கனிமத்தின் உண்மையான மதிப்பை வசூலிக்காமலும், சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் தனது பொறுப்பைக் கைவிட்டும், அனைத்து சட்டவிரோத சுரங்கங்களையும் சட்டப்பூர்வமாக்கும் உத்தரவை வெளியிட்டுள்ளது. இந்த அரசு உத்தரவு, சட்டவிரோதச் சுரங்க மாஃபியாவை மேலும் வளர்த்தெடுத்து பாதுகாக்க ஒரு முயற்சி" என்று விமர்சித்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+