போனஸ், சம்பள உயர்வு இருக்கட்டும்.. அரசு ஊழியர்கள் மனதை மீண்டும் குளிர வைத்த ஸ்டாலின்.. செம அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவல் ஆளிநர்களுக்கு, அவர்கள் விரும்பும் மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து, மொத்தம் 209 பெண் காவல் ஆளிநர்கள், தங்களது பேறுகால விடுப்பிற்குப் பிறகு. குழந்தைகளை கவனித்துக்கொள்ள ஏதுவாக, மற்ற மாநகரம்/மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பத்திருந்தனர்.

bonus dearness allowance

அதன்படி, 03.06.2025 வரை. பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்த மேற்கண்ட 209 பெண் காவல் ஆளிநர்களுக்கும் அவர்கள் விரும்பிய மாநகரம்/மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு தொடரும் நல்ல செய்தி

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு என்று கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏகப்பட்ட அறிவிப்புகளை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார். அரசு ஊழியர்களை கவரும் விதமாக வெளியிட்ட இந்த அறிவிப்புகள் என்னனென்ன என்று இங்கே பார்க்கலாம்.

அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு குறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீட்டை கட்டணமின்றி வழங்க, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக, அரசு ஊழியர்களுக்கு
இலவசமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பினை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு சட்டசபையில் அறிவித்தார். டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ. 2000 ஊதிய உயர்வான இந்த மாதம் (ஏப்ரல்) 1 ஆம் தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் செந்தில் பாலாஜி கூறினார். மேலும் 50,000 விவசாய மின் இணைப்புகள் இந்த ஆண்டு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% என்று அறிவிக்கப்பட்டது. இந்த முறை மத்திய அரசு சார்பாக 2% உயர்வு என்பது நிலை 1 அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் ரூ. 360 ஆக இருக்கும். அதாவது ரூ.360 சம்பளத்தில் உயரும் என்று அறிவிக்கப்பட்டது. இதே அளவு அல்லது 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன. 7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் (நிலை 1) ரூ.18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இவர்களுக்கு 360 ரூபாய் அகவிலைப்படி உயர்வு இருக்கும். ஜூலை-டிசம்பர் 2024 அகவிலைப்படி 3% அதிகரித்து 53% ஆக உயர்த்தப்பட்டது. தற்போது இதில் மேலும் 2% உயர்த்தப்பட்டு 55% ஆக அதிகரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் நாடு முழுக்க பல கோடி ஊழியர்களின் சம்பளம் உயரப்போகிறது.இதே அறிவிப்பு தமிழ்நாட்டிலும் வெளியிடப்பட்டது. இதோடு அரியர் தொகை தொடர்பான விளக்கமும் தற்போது வெளியாகி உள்ளது. ஜனவரி டூ மார்ச் வரையிலான 3 மாதங்களுக்கு மட்டும் அரியர் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது 1080 ரூபாய் வரி இவர்களுக்கு அரியர் தொகை கிடைக்கும்.

அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக் கால முன்பணம் ரூ.10,000ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் . கல்வி முன்பணம் தொழிற்கல்விக்கு ரூ.1 லட்சம், கலை, அறிவியல், மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக வழங்கப்படும்

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.500ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்வு. ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக்கால முன்பணம் ரூ.4,000ல் இருந்து ரூ.6,000 ஆக உயர்வு. அரசு ஊழியர்களுக்கான 1 ஆண்டுகால மகப்பேறு விடுப்பு அவர்களின் தகுதி காண் பருவத்திலும் (Probation Period) கணக்கில் | எடுத்துக்கொள்ளப்படும்/முன்பு இருந்த விதிகளின் படி மகப்பேறு விடுப்பு காலமானது தகுதிகாண் பருவத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படாததால் பெண் ஊழியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்பட்டது என்று சட்டப் சபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+